இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக மஹிந்திரா உள்ளது. எஸ்யூவி கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மஹிந்திரா தற்போது மின்சார எஸ்யூவி காரையும், அடுத்த தலைமுறைக்கான எஸ்யூவி காரையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன் பட்டியலை கீழே காணலாம்.
1. Mahindra Thar Facelift:
மஹிந்திராவின் புகழ்பெற்ற காராக திகழ்வது தார். இந்த தாரின் அப்டேட் வெர்சனாக சந்தைக்கு வர உள்ளது மஹிந்திரா தார் ஃபேஸ்லிப்ட். தார் ராக்ஸில் உள்ளது போல இந்த காரை வடிவமைத்துள்ளனர். இந்த கார் டீசல் மற்றும் பெட்ரோலில் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. காரின் முகப்பு விளக்குகள், பம்பர், கேபின் தார் ராக்ஸில் உள்ளது போல உருவாக்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டசர் டீசல், 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் வரும் செப்டம்பர் 1ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2. Mahindra XEV 7e:
மஹிந்திரா நிறுவனம் இந்த Mahindra XEV 7e காரை நீண்ட காலமாக தயாரிப்பிலே வைத்திருந்தனர். 7 இருக்கைகள் கொண்ட எஸ்யூவி காராக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் மின்சார காராக வடிவமைக்கப்பட்டுள்ளது. அடிப்படையில் இந்த கார் XUV700 மாடலில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் முதல் 7 சீட்டர் மின்சார எஸ்யூவி காராக இந்த Mahindra XEV 7e இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் 59 கிலோவாட், 79 கிலோவாட் பேட்டரியில் உருவாகியுள்ளது. இந்த கார் இந்தாண்டு இறுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3. New-Gen Mahindra Bolero:
மஹிந்திராவின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்று பொலிரோ. இதன் அப்டேட் வெர்சனாக New-Gen Bolero-வை அறிமுகப்படுத்த மஹிந்திரா முடிவு செய்துள்ளது. இந்த கார் அடுத்தாண்டு அறிமுகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட்டமான முகப்பு விளக்குகள், பெரியளவு பம்பர்கள் என இந்த கார் கம்பீரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
4. Mahindra XUV3XO EV:
மஹிந்திரா நிறுவனம் விரைவில் மின்சார காரான Mahindra XUV3XO EV காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கார் டாடா நெக்சான் மின்சார கார் மற்றும் சந்தைக்கு விரைவில் அறிமுகமாக உள்ள கியாவின் சைரோஸ் மின்சார கார் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. பனரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி பார்க்கிங் கேமரா, டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இந்த காரில் உள்ளது.
5. Mahindra XUV700 Facelift:
அடுத்தாண்டு இந்திய சந்தையில் மஹிந்திரா அறிமுகப்படுத்த உள்ள கார் XUV700 Facelift காரை அறிமுகப்படுத்த உள்ளனர். இந்த காரின் பரிசோதனை ஓட்டம் பல இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. 2.2 லிட்டர் mHawk டீசல் எஞ்ஜின் மற்றும் 2 லிட்டர் mStallion பெட்ரோல் எஞ்ஜினில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. 6 கியர் மேனுவலாகவும், 6 கியர் டார்க் கான்வெர்டர் ஆட்டோமெட்டிக் கியரிலும் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா அறிமுகப்படுத்த உள்ள இந்த 5 கார்களும் இந்திய சந்தையில் மிகப்பெரிய ஆதிக்கத்தை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI