Mahindra Thar ROXX: டவுட்டே வேண்டாம்..! சொல்லி அடித்த மஹிந்திரா தார் ராக்ஸ் - ஆண்டின் சிறந்த காராக தேர்வு

Mahindra Thar ROXX: நடப்பாண்டில் இந்தியாவின் சிறந்த காராக (ICOTY) மஹிந்திரா நிறுவனத்தின் தார் ராக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

Mahindra Thar ROXX: நடப்பாண்டில் இந்தியாவின் சிறந்த காருக்கான போட்டியில் மாருதி டிசைர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

Continues below advertisement

ஆண்டின் சிறந்த கார்:

மஹிந்திரா தார் ராக்ஸ் இந்த ஆண்டின் சிறந்த இந்திய காராக (2025) அறிவிக்கப்பட்டுள்ளது. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் மற்றும் மாருதி சுசூகி டிசையர் ஆகிய மாடல்களை பின்னுக்கு தள்ளி இந்த பெருமையை பெற்றுள்ளது. அதோடு, டாடா கர்வ்வ் , டாடா பன்ச் EV , BYD eMAX7, சிட்ரோயன் பசால்ட்  போன்ற மற்ற புதிய கார் மாடல்களிலிருந்து கடும் போட்டியை எதிர்கொண்டது. கடந்த ஆண்டில் அறிமுகமான மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து கார்களையும் பின்னுக்கு தள்ளி தான், மஹிந்திரா தார் ராகஸ் SUV 2025ல் இந்தியாவின் சிறந்த காராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு முன்னணி ஆட்டோமொபைல் துறை சார்ந்த ஊடகத்தில் பணியாற்றும், முத்த பத்திரிகையாளர்கள் இணைந்து நடப்பாண்டில் இந்தியாவின் சிறந்த காராக தார் ராக்ஸை தேர்வு செய்துள்ளனர். 

தார் ராக்ஸ் விவரங்கள்:

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி அன்று தார் ராகஸ் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது, மஹிந்திரா தார் ராக்ஸ் என்பது தார் எஸ்யூவியின் 5 டோர் எடிஷனாகும். இது பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு எடிஷன்களில் கிடைக்கிறது.  இவை இரண்டும் ஒரு RWD கான்ஃபிகரேஷனை ஸ்டேண்டர்டாக பெறுகின்றன. ஆனால் டீசல் எடிஷன் மட்டுமே 4WD பெறுகிறது. 360 டிகிரி கேமரா, லெவல்-2 ஏடிஏஎஸ், வயர்லெஸ் ஃபோன் மிரரிங், சன்ரூஃப் மற்றும் எல்இடி லைட் பேக்கேஜ் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது.

விலை அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் 1.76 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகளைப் பெற்று இந்திய வாகன உற்பத்தியாளருக்கு தார் ராக்ஸ் ஒரு வெற்றிகரமான பயணத்தை தொடங்கியுள்ளது. இது தற்போது ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருப்பு காலத்தை கொண்டுள்ளது, டீசல் வரம்பிற்கான தேவை  அதிகமாக உள்ளது. இதன் விலை ரூ.11.35 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

ஆண்டின் சிறந்த மின்சார கார்:

MG Windsor இந்த ஆண்டு அறிமுகமான மிகவும் தனித்துவமான மின்சார கார்களில் ஒன்றாகும். குறிப்பாக இந்தியாவில் பேட்டரி வாடகை திட்டத்தை அறிமுகப்படுத்தியதால், அதன் ஆரம்ப விலை அதன் போட்டியாளர்களை விட குறைவாக இருந்தது. ICOTY 2025 இல் BMW i5 மற்றும் BYD Seal ஐ தோற்கடித்து இந்த ஆண்டின் கிரீன் கார் பட்டத்தை வென்றது. எக்சைட், எக்ஸ்க்ளூசிவ் மற்றும் எசென்ஸ் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த கார்,  பேட்டரி வாடகை திட்டத்துடன் ரூ.9.99 லட்சம் முதல் ரூ.11.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையிலான விலையில் கிடைக்கிறது.

ஆண்டின் சிறந்த பிரீமியம் கார்:

Mercedes-Benz E-Class LWB, அதன் ஆறாவது தலைமுறை அவதாரத்தில் அக்டோபர் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ICOTY ஆல் 2025 ஆம் ஆண்டின் பிரீமியம் கார் என்ற விருதை வென்றுள்ளது. இதன் விலை ரூ.78.50 லட்சத்தில் இருந்து ரூ.92.50 லட்சம் வரை நீள்கிறது. மேலும்,  E 200, E 220d மற்றும் E 450 ஆகிய மூன்று வேரியண்ட்களில் கிடைக்கப்பெறுகிறது. இந்த பிரிவில் BMW 5 சீரிஸ் மற்றும் கியா கார்னிவல் விருதுப் பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola