மிஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் பிரபல தார் மாடலில் Thar.E அறிமுகமாகியுள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை மதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மின்சார ரக வாகனங்களை வெளியிட முனைப்புடன் செயலபட்டு வருகிறது. அந்த வகையில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எலக்ட்ரிக் தார் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.
Thar.E
இந்த எலக்ட்ரிக் தார் மாடல் ஏற்கன்வே உள்ள எக்ஸ்.யு.வி. (XUV300) மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. எக்ஸ்.யு.வி. 400 மாடலும் இதே போன்றதுதான். மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து மின்சார வாகன விற்பனையில் பல்வேறு மாடல்களை சந்தையில் களமிறக்க திட்டமிட்டுள்ளது. எலக்ட்ரிக் தார் மாடல் Born Electric Range என்ற கார்களுடன் இதை தயாரிக்க உள்ளது.
இது INGLO-P1 (india global) ரகத்த்தில் தயாரிக்கப்பாடும் எல்க்ட்ரிக் கார் ஆகும். அதாவது உலக தரத்தில் மின்சார வாகனங்கள், புதுபிக்கப்பட்டும் ஆற்றல் மிக்க எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வடிவமைக்கும், தயாரிக்கும் தொழில்நுட்பம். இதை மஹிந்திரா நிறுவனம் பயன்படுத்தியிருப்பது அதன் தரம் முழுமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீடித்த பேட்டரி திறன், குறைந்த வாகன எடை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களில் உள்ள அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் மேம்படுத்தப்பட்டு இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 2,776 மிமி முதல் 2,976 மிமி வரை என்ற அளவிலான Wheelbase கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சந்தையில் விற்பனை செய்யப்படும் எஸ்.யு.வி.களை விட Thar.e மாடல் புதுமையாக இருக்கும் என்று நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னால் உள்ள எல்.இ.டி-க்கள் புதுமையாக சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரிக் காரில் உள்ள பேட்டரியின் அளவு, அதன் திறன் குறித்த விவரங்களை மஹிந்திரா நிறுவனம் இன்னும் தெளிவாக் வெளியிடவில்லை. சந்தைக்கு விற்பனை வரும் தேதி குறித்தும் இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதன் தயாரிப்பு 2025 ஆம் ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காரின் இண்டீரியர் ஆடியோ சிஸ்டன், 5ஜி, கனெக்டிவிட்டி, சிங்கள் பேன் சன் ரூப், செமி ஆட்டோமேட்டிங் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் உள்ளே 2.2 லிட்டர் mHawk டர்போ டீசல் என்ஜின் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பவர் 172 BHP மற்றும் டார்க் 400 NM ஆகும். இதனுடன் 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் வசதி, 6 ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இடம்பெறும். இதில் 4x4 சிஸ்டம் இருக்கும்.
2 ADAS லெவல், Zip, Zap, Zoom என்ற டிரைவிங் மோட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் கார் ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, லத்தீன் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்ய மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை
மஹிந்திரா குழுமம் அடுத்தடுத்து அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள எலக்ட்ரிக் கார்களுக்கு இசைப்புயல் ஏர்.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். காரை அன்லாக் செய்வது, மோட் மாற்றுவது என இந்த செயல்பாடுகளுக்கு ஏர்.ஆர். ரஹ்மான் இசை உருவாக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா பிராண்டை பிரபலப்படுத்தும் வகையில், "Le Chalaang" என்ற பாடலையும் மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டது. இந்த பாடலுக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் இந்தப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. சினிமா பாடல் அளவிற்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள இப்பாடல் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலில் சவுண்ட் எபெக்ட்ஸுக்காக பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI