மஹிந்திரா நிறுவனத்தின் தார் மாடல் மின்சார கார், 2027ம் ஆண்டு விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


தார் மின்சார கார்:


எஸ்யுவி கார் மாடல்களில் முன்னணியில் உள்ள மஹிந்திரா நிறுவனம், உள்நாட்டில் அதிகரித்துள்ள மின்சார கார்களின் மீதும் கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே, அந்நிறுவனத்தின் இரண்டு மின்சார கார் மாடல்கள் இந்திய சந்தையில் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், மஹிந்திரா நிறுவனத்தின் பிரபல கார் மாடலான தாரின்பெயரில், புதிய மின்சார தார் கார்  வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், தற்போதுள்ள தார் காரை தழுவி புதிய மின்சார கார் வடிவமைக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்சார தார் மாடல் காரை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்தது. அதுதொடர்பான சில சுவாரஸ்ய தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


டாப் 5 அப்டேட்:



  • புதிய மின்சார தார் கார் ஏற்கனவே உள்ள தார் காரை சார்ந்து இருக்காது எனவும், அதில் உள்ள வடிவமைப்புகள் எதுவும் பின்பற்றப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. INGLO பிளார்ஃபார்மில் புதிய கார் தயரிக்கப்பட உள்ளதாகவும், Born electric range என்ற பிரிவில் மின்சார காரை வடிவமைப்பது சாதகமாக இருக்கும் என்பதால் மஹிந்திரா நிறுவனம் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


  • மின்சார தார் கார் இனி ஒரு லேடர் ஃப்ரேம் கொண்ட SUV அல்ல.  அதற்குப் பதிலாக ஆல் வீல் டிரைவுடனான இரட்டை மோட்டார் அமைப்பை கொண்டுள்ளது.   இதன் காரணமாக எந்த ஹார்ட்கோர் ஆஃப்-ரோடருக்கும் தேவைப்படும் அளவிலான அதிகப்படியான டார்க் விசை இந்த மின்சார மோட்டார்களில் இருந்து கிடைக்கும்



  • பாக்ஸ் வடிவில் சதுர அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள மின்சார தார் கார் காண்பதற்கே, கம்பீரமாகவும்  மிரட்டலான வெளிப்புற அமைப்பை கொண்டுள்ளது. எல்.ஈ.டி விளக்குகள், கிரில் மற்றும் 5 கதவுகள் என ஏற்கனவே உள்ள தார் காரில் இருந்து, புதிய மின்சார தார் கார் முற்றிலும் வேறுபட்டுள்ளது. 

  • காரின் உட்புற அமைப்பானது ட்ச் ஸ்கிரீன் உள்ளிட்ட பல்வேறு எதிர்கால தொழில்நுட்பத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.  மறுசுழற்சி செய்யத்தக்க பொருட்களை சேர்த்துள்ளதோடு, பாகங்களை மாற்றும் வகையிலும் புதிய கார் உருவாக்கப்பட்டுள்ளது.

  • புதிய மின்சார தார் கார் சந்தைக்கு வருவது என்பது குறைந்தபட்சம் 2027ம் ஆண்டு அல்லது அதையும் தாண்டலாம் என கூறப்படுகிறது. அதேநேரம், பெரிய பேட்டரி பேக்குடன் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த காரை, ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. 


இதர அம்சங்கள்:


மின்சார காரின் உள்ளே 2.2 லிட்டர் mHawk டர்போ டீசல் இன்ஜின் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இதன் பவர் 172 BHP மற்றும் டார்க் 400 NM ஆகும். இதனுடன் 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் வசதி, 6 ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இடம்பெறும். இதில் 4x4 சிஸ்டம் இருக்கும். 2 ADAS லெவல், Zip, Zap, Zoom என்ற டிரைவிங் மோட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார கார் ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, லத்தீன் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்ய மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI