Mahindra XEV 9e BE 6 Wireless Carplay: மஹிந்திரா நிறுவனத்தின் மின்சார கார்களான XEV 9e, BE 6 மாடல்களில் அறிமுகத்தின்போது இல்லாத வயர்லெஸ் கார்பிளே அம்சம் தற்போது இணைக்கப்பட்டுள்ளது.
சாஃப்ட்வேர் அப்டேட் கொடுத்த மஹிந்திரா:
மஹிந்திரா நிறுவனத்தின் மின்சார கார் மாடல்களான XEV 9e மற்றும் BE 6 ஆகியவற்றில், வாடிக்கையாளர்கலள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொழில்நுட்ப அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு மாடல்களிலும் தற்போது வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட் போன் இணைப்பு என்பது பயனர்களுக்கு மிகவும் எளிதாக மாறியுள்ளது. பிரதான சாஃப்ட்வேர் அப்டேட்டாக கருதப்படும் இந்த அம்சமானது, தற்போது புதியதாக டெலிவெரி செய்யப்படும் அனைத்து கார்களிலும் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே இந்த காரை வாங்கியவர்கள், அருகிலுள்ள டீலர்களை அணுகி புதிய அப்டேட் குறித்த விவரங்களை பெறலாம்.
வயர்லெஸ் கார்பிளே விவரங்கள்:
வயர்லெஸ் கார்பிளே அமைப்பானது குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப் மூலம் தேவையான ஆற்றலை பெறுகிறது. கார்களின் நவீன இன்ஃபோடெயின்மெண்ட் செட்-அப் உடன் சேர்ந்து செயல்படுகிறது. இரண்டு கார் மாடல்களிலும் இடம்பெற்றுள்ள 12.3 இன்ச் டிஸ்பிளேக்கள் 5G, இன் - பில்ட் ஆப்கள் மற்றும் ரிமோட் வெஹைகிள் கண்ட்ரோல் ஆகியவற்றை ஆதரிக்கின்றன. இந்த அப்டேட்டானது பயனர்களின் தொழில்நுட்ப பயன்பாட்டு அனுபவத்தை மேலும் மேம்படுத்தும்.
வயர்லெஸ் கார்ப்ளே போனை காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இணைக்க புளூடூத் மற்றும் வைஃபையைப் பயன்படுத்துகிறது. எந்தவித கேபிளின் அவசியமும் இன்றி ஃபோனின் அம்சங்களைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. அதாவது USB கேபிள் மூலம் உங்கள் தொலைபேசியை காருடன் இணைக்க வேண்டிய அவசியத்தை தவிர்க்கிறது. அழைப்புகள், நேவிகேஷன் மற்றும் பாடல்களை ஒலிக்கச் செய்வது போன்ற அம்சங்களை அணுகுவதை எளிதாக்குகிறது. அவசர காலங்களில் ஒரு கையில் போனை கையாண்டுகொண்டே, காரை ஓட்டுவது போன்ற ஆபத்தான மற்றும் சிரமமான பயண அனுபவத்தை தவிர்க்க இந்த அம்சம் உதவும்.
அனைத்து வேரியண்ட்களுக்கும் அப்டேட்:
புதிய வயர்லெஸ் வசதியானது, பேக் ஒன் தொடங்கி பேக் 3 வரையிலான XEV 9e மற்றும் BE 6 கார் மாடல்களின் அனைத்து வேரியண்ட்களிலும் சேர்க்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் இருந்து தற்போது வெளியே வரும் அனைத்து யூனிட்களிலும் இந்த அம்சம் இடம்பெற்றுள்ளதாகவும், எதிர்காலத்தில் அப்டேட் செய்ய வேண்டும் மற்றும் சாஃப்ட்வேர் பேட்ச் பணிகளை செய்ய வேண்டும் என பயனர்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்றும் மஹிந்திரா நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. கார் அறிமுகப்படுத்தியபோதே வயர்லெஸ் அம்சம் இல்லாதது குறித்து, ஆரம்பத்தில் இந்த காரை வாங்கியவர்கள் புகார்கள் தெரிவித்தனர். அதனடிப்படையில், மஹிந்திரா நிறுவனம் இந்த அப்டேட்டை வழங்கியுள்ளது.
இரண்டு வெவ்வேறு மின்சார கார்கள்:
மஹிந்திராவின் XEV 9e கார் மாடலின் விலையானது ரூ.21.9 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. இது ஆடம்பரம் மற்றும் வசதிகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. கூபே வடிவிலான டிசைன்கள், மூன்று ஸ்க்ரீன்கள், AR அடிப்படையிலான ஹெட்-அப் டிஸ்பிளே, லெவல் 2+ ட்ரைவர் அசிஸ்டன்ஸ் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. 16 ஸீக்கர் சவுண்ட் சிஸ்டத்தை கொண்டுள்ள இந்த காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 656 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.
ஸ்போர்டியர் பயண அனுபவத்தை வழங்கும் BE 6 கார் மாடலின் விலை ரூ.18.9 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. ரியர் - வீல் ட்ரைவ் அம்சத்தை கொண்டுள்ள இந்த கார், பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 6.7 விநாடிகளில் எட்டும். பிரத்யேகமான பூஸ்ட் மோடை கொண்டுள்ள இந்த காரானது, முழுமையாக சார்ஜ் செய்தால் 623 கிலோ மீட்டர் ரேஞ்ச் வழங்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனையில் அசத்தும் XEV 9e கார்:
BE 6 மற்றும் XEV 9e ஆகிய கார் மாடல்களை அறிமுகப்படுத்திய முதல் நாளிலேயே மொத்தமாக 30 ஆயிரம் முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 11 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் டெலிவெரி செய்யப்பட்டுள்ளன. தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதனை ஈடுகட்ட உற்பத்தியை பெருக்கவும் மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
குறிப்பிட்ட இரண்டு கார்களில் XEV 9e கார் மாடல் அதிகளவில் வாடிக்கையாளர்களை கவர்ந்து, 59 சதவிகித முன்பதிவை பெற்றுள்ளது. அதிலும், பேக் 1, பேக் 2, பேக் 3 செலெக்ட் மற்ரும் பேக் 4 என நான்கு வேரியண்ட்களில், டாப்-ஸ்பெக்கான பேக் 3 முன்பதிவானது 2 ஆயிரத்து 441 ஆக உயர்ந்துள்ளது. தாராளமான இடவசதி, பிரீமியம் கேபின், வலுவான ரேஞ்ச் உடன், பாதுகாப்பிற்கான 5 ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்று வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 59Kwh மற்றும் 79Kwh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களில் XEV 9e கார் மாடல் கிடைக்கிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI