மஹிந்த்ரா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கான விலையில் ரூ.72,000 வரையில் சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை ஏப்ரல் மாதம் இறுதி வரை அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மஹிந்த்ரா சலுகை:


அதிகரித்து வரும் உதிரி பாகங்களின் விலை உயர்வு காரணமாக. பல்வேறு கார் உற்பத்தி நிறுவனங்களும் தங்களது கார்களின் விலையை உயர்த்தி வருகின்றன. அதன்படி, உள்நாட்டு கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்த்ரா கடந்த ஓராண்டு காலத்தில் அவ்வப்போது, தனது குறிப்பிட்ட கார் மாடல்களின் விலையை உயர்த்தியது. இந்நிலையில், தனது குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு ஏப்ரல் மாதம் முடியும் வரையில், ரூ.72 அயிரம் வரையில் மஹிந்த்ரா நிறுவனம் சலுகையை அறிவித்துள்ளது.


எந்த கார் மாடல்களுக்கு சலுகை?


புதிய அறிவிப்பின்படி, மஹிந்த்ரா நிறுவனம் தனது கார்களில் தேர்வு செய்யப்பட்ட எஸ்யுவி மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 72 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்குகிறது. அதன்படி வாடிக்கையாளர்கள் மராசோ,  பொலேரோ நியோ, பொலேரோ,  XUV300 மற்றும் தார் 4 வீல் டிரைவ் போன்ற மாடல்களை சலுகைகள் உடன் வாங்கிடலாம். 


மராசோவிற்கு சலுகை:


மராசோ மாடல் இந்தியாவில் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்நிலையில் ஏப்ரல் மாத சலுகைகளில் மஹிந்த்ரா மராசோ மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 72 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் டாப் எண்ட் M6 மாடலுக்கு ரூ.72 ஆயிரம் முழுமையாக தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேநேரம், மிட் ரேஞ்ச் M4பிளஸ் மற்றும் பேஸ் M2 வேரியண்ட்களுக்கு முறையே ரூ. 34 ஆயிரம் மற்றும் ரூ. 58 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. 


பொலேரோ மாடல்:


மஹிந்திரா பொலேரோ நியோ மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 48 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதன் டாப் எண்ட் மாடல்களுக்கு ரூ. 36 ஆயிரம் வரையிலான தள்ளுபடி, ரூ. 12 ஆயிரம் வரையிலான அக்சஸரீஸ்கள் வழங்கப்படுகின்றன. அதேநேரம், பொலேரோ மாடலுக்கு ரூ. 66 ஆயிரம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் டாப் எண்ட் B6 (O) வேரியண்டிற்கு ரூ. 51 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான அக்சஸரீஸ்கள் வழங்கப்படுகின்றன. மிட் ரேஞ்ச் மற்றும் எண்ட்ரி லெவல் வேரியண்ட்களுக்கு முறையே ரூ. 24 ஆயிரம் மற்றும் ரூ. 37 ஆயிரம் வரையிலான பலன்களை வாடிக்கையாளர்கள் பெறலாம். 


தார் மாடலுக்கான சலுகை:


இதனிடையே,  மஹிந்திரா தார் 4X4 மாடலை வாங்குவோருக்கு ரூ. 40 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இது பெட்ரோல் மற்றும் டீசல் என இருவித வேரியண்ட்களுக்கும் பொருந்தும். XUV300 மாடலுக்கு ரூ. 52 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் W8 டீசல் வேரியண்டிற்கு ரூ. 42 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான அக்சஸரீஸ்கள் வழங்கப்படுகின்றன. அதேநேரம், தற்போது அதிக பிரபலமாக இருக்கும் மஹிந்த்ரா நிறுவனத்தின்  ஸ்கார்பியோ கிளாசிக், ஸ்கார்பியோ N, தார் 2 வீல் டிரைவ், XUV400 EV மற்றும் XUV700 போன்ற மாடல்களுக்கு எவ்வித சலுகையும் அறிவிக்கப்படவில்லை. 


Car loan Information:

Calculate Car Loan EMI