இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா. ஆன்ரோட் மற்றும் ஆஃப் ரோட் வாகன தயாரிப்பில் மஹிந்திராவிற்கு தனி செல்வாக்கு உண்டு. தரம், விலை, மைலேஜ் ஆகிய காரணங்களுக்காகவே மஹிந்திரா வாடிக்கையாளர்கள் மத்தியில் தனி செல்வாக்கு உண்டு.
7 சீட்டர் கார்:
இந்த கார் ஒரு எஸ்யூவி ரக கார் ஆகும். இந்த கார் ஒரு 7 சீட்டர் கார் ஆகும். நடுத்தர மற்றும் பெரிய குடும்பத்தினருக்கு ஏற்ற வாகனம் இந்த வாகனம் ஆகும். இந்த கார் முழுக்க முழுக்க டீசலில் ஓடும் ஆற்றல் கொண்ட கார் ஆகும். 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட கார் இதுவாகும். இந்த காரில் மொத்தம் 5 வேரியண்டகள் உள்ளது.
வேரியண்ட்களும், விலையும்:
Bolero Neo N4 - ரூபாய் 10.37 லட்சம்
Bolero Neo N8 - ரூபாய் 11.33 லட்சம்
Bolero Neo N10 (R) - ரூபாய் 11.92 லட்சம்
Bolero Neo N11 - ரூபாய் 12.16 லட்சம்
Bolero Neo N10 (O) - ரூபாய் 13.28 லட்சம்
மைலேஜ்:
இந்த கார் 260 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இந்த காரில் 1493 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 3750 ஆர்பிஎம் ஆற்றல் கொண்டது. 5 கியர்கள் கொண்டது. இந்த கார் 16 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது.
9 இன்ச் டச்ஸ்கிரீன் கொண்டது. பின்பக்கம் பார்க்கும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. செல்போன் சார்ஜர் வசதி கொண்டது. இந்த காரில் 2 ஏர்பேக்குகள் உள்ளது. ஓட்டுனர் மற்றும் முன் பக்க பயணிக்கு இந்த ஏர்பேக் வசதி உள்ளது.
மஹிந்திரா பொலிரோ, மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் உள்ளது. இந்த காரின் வெளிப்புற தோற்றம் கம்பீரமாக உள்ளது. 15 இன்ச் மற்றும் 16 இன்ச் சக்கரங்கள் கொண்டது. இந்த கார் வெள்ளை, கருப்பு, நீலம், சாம்பல் ஆகிய வண்ணங்களில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI