Lotus Eletre Review: லோடஸ் எலெட்ரே கார் மாடலின் முழு செயல்திறன் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட மொத்த விவரங்களையும் இந்த தொகுப்பில் அறியலாம்.




லோடஸ் எலெட்ரே (Lotus Eletre):


பல மின்சார கார்களை ஓட்டினாலும் இன்ஜினில் எரிபொருளை எரித்து அதன் மூலம் கிடைக்கும் ஆற்றலால், வாகனத்தை இயக்கும் அனுபவமானது கிடைக்கவில்லை.  இருப்பினும், Lotus Eletre SUV சற்றே வித்தியாசமானதாக உள்ளது. இந்த வாகனத்தை அதன்முழு திறனில் செயல்படுத்தும் போது அதன் வேகம் உங்களை மெய்சிலிர்க்கை வைப்பதோடு, பெருமூச்சு விடவும் செய்யும். 2.5 டன் எடையிலான இந்த எஸ்யுவி ஆனது 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 3 விநாடிகளில் எட்டி விடும். சூப்பர் காரில் பயணிக்கும் அனுபவத்தை வழங்குவதன் மூலம், மற்ற மின்சார கார்களில் இருந்து எலெட்ரே மிகவும் வேறுபட்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் காரை மட்டுமே வடிவமைத்து வந்த லோடஸ் நிறுவனம் முதல்முறையாக, வலுவான செயல்திறன் மற்றும் தொழில்நுட்பத்தை கொண்ட எஸ்யுவியை வடிவமைத்துள்ளது. 


லோடஸ் எலெட்ரே வடிவமைப்பு:


எலெட்ரே மாடல் காரானது அளவில் பெரியதாக இருப்பதோடு, தோற்றமும் காண்போரை வியக்கச் செய்கிறது. எலக்ட்ரிக் ஆர்கிடெக்சர் வடிவமைப்பாளர்களுக்கு தோற்றத்தில் சுதந்திரமாக இருக்க உதவியிருக்கிறது.  Eletre ஆனது லோட்டஸ் ஸ்போர்ட்ஸ் கார்களின் ஐகானிக் மிட்-இன்ஜின் அமைப்பை எதிரொலிக்கும் முன்னோடி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. சூப்பர் கார்களின் மிக முக்கியமான அம்சமாக கருதப்படும் ஏரோ எபிஷியன்ஷிக்காக  கார் முழுவதும் வென்ட்கள்/டக்ட்கள் மற்றும் ஸ்லாஷ்கள் வழங்கப்பட்டுள்ளன. இது பயனாளர்களுடன், பார்வையாளர்களையும் கட்டி இழுக்கிறது.


லோடஸ் எலெட்ரே சிறப்பம்சங்கள்:


கீ கார்ட் அல்லது தனிப்பட்ட வடிவிலான சாவியைக் கொண்டு கதவைத் Eletre காரின் கதவை திறக்கலாம். தொடர்ந்து புத்துணர்ச்சி அளிக்கு வகையில் காற்றோட்டமான உட்புற வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. 15.1 அங்குல திரை டேஸ் முழுவதற்குமான இன்போ பேனலும் உள்ளது. உண்மையான உலோக சுவிட்ச் கியர் போன்ற ஸ்டேண்டர்ட் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.  தொடுதிரை மென்மையாய் உள்ளதோடு,  காட்சியமைப்புகள் மிகவும் எதிர்காலத்திற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. அதே சமயம் 15 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டமும் (23 விருப்பமானது) நல்ல அனுபவத்தை வழங்குகிறது. ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு பெயர்போன லோடஸ் நிறுவனத்தின் எலெட்ரே மாடலிலும் நல்ல பூட் வசதி உள்ளது. எந்தவொரு சத்தமுமின்றி மிகவும் அமைதியாக இந்த காரில் பயணம் செய்ய முடிகிறது. மோசமான சாலைகளில் ஓட்டும்போதும் எந்தவித அசவுகரியத்தையும் உணராத வகையில், சிறப்பான கிரவுண்ட் கிளியரன்ஸ் இடம்பெற்றுள்ளது. 22 இன்ச் சக்கரங்கள் காரணமாக சவாரி உறுதியானதாக இருக்க, அதன் அகலமானது கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கும். 


பவர்-டிரெயின் விவரங்கள்:


ஒரு புதிய 800v அர்ப்பணிக்கப்பட்ட மின்சார வாகன கட்டமைப்பு மற்றும் இரட்டை மோட்டார் தளவமைப்பு 600bhp மற்றும் 600km வரம்பைக் கொண்டுவருகிறது, அதே நேரம் நாங்கள் பயன்படுத்திய Eletre R மாடலானது 905bhp மற்றும் 985Nm ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இது வேகமான EV மற்றும் ஸ்போர்ட் அல்லது ட்ராக் பிரிவில் இடம்பெறுகிறது. எலெட்ரேவை மெதுவானதாக இயக்க முடிந்தாலும், வேகமான பயன்முறையில் இயக்கப்படும் போது ​அது முற்றிலும் மற்றொரு காராக உள்ளது. வாகனத்தின் எடை முழுவது நேர்த்தியாக கீழே வழங்கப்பட்டுள்ளதால், இதன் பெட்ரோல் இன்ஜின் வேரியண்டை விட சிறந்த செயல்திறனை கொண்டுள்ளது. ஒரு முக்கியமான பிட் என்பது 2-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் ஆகும். அதிகபட்சமாக மணிக்கு 500 கிலோ மீட்டர் வேகத்தில் லோடஸ் எலெட்ரே கார் மாடலை செலுத்த முடியும்.  ரூ.3 கோடியில் மதிப்பிலான எலெட்ரே ஆர் ​ கார் மாடல் ​வேகமானது, வேடிக்கையானது மற்றும் மின்சார கார் அல்லது உயர் செயல்திறன் கொண்ட கார்களில் முற்றிலும் மாறுபட்டது. சந்தையில் உள்ள சொகுசு கார்களுக்கு இடையே தனித்து நிற்கிறது.


பாசிட்டிவ்: செயல்திறன், தோற்றம், தரம், இடவசதி, பயண அனுபவம், சிறப்பம்சங்கள்


நெகட்டிவ்: வாகனத்தின் ரேஞ்ச் இன்னும் சற்று அதிகமாக இருக்கலாம், விலையும் அதிகம்


Car loan Information:

Calculate Car Loan EMI