Elon Musk: 2024-லேயே இந்தியா டெஸ்லா கார்? பிரதமர் மோடியை சந்திக்க தயாரான எலான் மஸ்க் போட்ட டிவீட்

Elon Musk: இந்தியாவில் நரேந்திர மோடி உடனான சந்திப்பை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக, எக்ஸ் மற்றும் டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

Elon Musk: பிரதமர் உடனான சந்திப்பின்போது இந்தியாவிஸ் தனது முதலீடுகள் குறித்து, எலான் மஸ்க் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Continues below advertisement

எலான் மஸ்க் டிவீட்:

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலோன் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த மாத இறுதியில் பிரதமர் மோடியுடனான ஒரு குறிப்பிடத்தக்க சந்திப்பிற்காக, இந்தியாவிற்கு வருகை தரவுள்ள நிலையில் அவர் பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பயணத்தின் போது, இந்தியாவில் தனது நிறுவனத்தின் முதலீட்டுத் திட்டங்களையும், நாட்டில் டெஸ்லா தொழிற்சாலையை நிறுவுவது பற்றியும் எலான் மஸ்க் அறிவிப்பார் என கூறப்படுகிறது.  

இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை?

இந்தியாவில் டெஸ்லா மின்சார வாகனங்களை வழங்குவது 'இயற்கையான முன்னேற்றம்' என்று எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்நிலையில்,  ஏப்ரல் 22 அவர் இந்தியா வரக்கூடும் என்றும், அபோது நிறுவனத்தின் மற்ற முகிய நிர்வாகிகளும் உடனிருப்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் டெஸ்லாவின் லட்சியங்கள் குறித்து அவர் ஒரு தனி பொது அறிவிப்பையும் வெளியிடுவார் என தெரிகிறது.

மோடி - எலான் மஸ்க் சந்திப்பு:

முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாத பிரதமர் மோடி  அமெரிக்கா சென்றிருந்தபோது,  எலான் மஸ்க் உடனான சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது,  டெஸ்லா விரைவில் இந்திய சந்தையில் நுழையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியதோடு,  ​​2024 இல் இந்தியாவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் எலான் மஸ்க் கூறினார். அரசாங்கம் புதிய மின்சார வாகனக் கொள்கையை அறிவித்த சில வாரங்களுக்குப் பிறகு, அவர் இந்தியா வரவுள்ளார். புதிய திட்டத்தின்படி, குறைந்தபட்சம் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் நாட்டில் உற்பத்தி ஆலைகளை நிறுவும் நிறுவனங்களுக்கு இறக்குமதி வரிச் சலுகைகள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. 
 
 
முன்னதாக, டெஸ்லா அதிகாரிகள் இந்த மாதம் இந்தியாவிற்கு வருகை தரும் போது உற்பத்தி ஆலைக்கான சாத்தியமான தளங்களை ஆய்வு செய்வார்கள்  எனவும், அந்நிறுவனம் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ரய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது. கூடுதலாக, நடப்பாண்டின் பிற்பகுதியில் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதை இலக்காகக் கொண்டு, டெஸ்லா தனது ஜெர்மன் ஆலையில் வலது கை இயக்கி வாகனங்களின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.
Continues below advertisement
Sponsored Links by Taboola