Tata Car Offers: டாடா நிறுவனத்தின் டியாகோ, டைகோர், ஆல்ட்ரோஸ் மற்றும் நெக்ஸான் கார் மாடல்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


டாடா கார்களுக்கான சலுகைகள்:


நாடு முழுவதும் உள்ள டாடா மோட்டார்ஸ் டீலர்ஷிப்கள் Tiago, Tigor, Altroz ​​மற்றும் Nexon மீது கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளன. MY2024 யூனிட்கள் ரூ. 40,000 வரை தள்ளுபடியைப் பெறுகின்றன, அதே நேரத்தில் MY2023 யூனிட்கள் இந்த மாதத்தில் இன்னும் அதிக தள்ளுபடியைப் பெறுகின்றன. இந்த பலன்களில் பணத் தள்ளுபடிகள் மற்றும் பரிமாற்றம்/ஸ்கிராப்பேஜ் நன்மைகள் ஆகியவையும் அடங்கும். அந்த வகையில், இந்த மாதம் புதிய டாடா கார் வாங்கினால் எவ்வளவு சேமிக்க முடியும் என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.


Tata Tiago தள்ளுபடிகள் ஏப்ரல் 2024:


Tata Tiago XT மற்றும் XT (O) வகைகள் அதிகபட்சமாக ரூ.40,000 வரை தள்ளுபடியுடன் கிடைக்கும். XM வேரியன்ட் ரூ.25,000 வரை தள்ளுபடி பெறுகிறது, மற்ற அனைத்து வகைகளுக்கும் ரூ.30,000 வரை தள்ளுபடியுடன் வழங்கப்படுகின்றன. Tiago CNG ஆனது ரூ.25,000 மதிப்புள்ள நன்மைகளுடன் வழங்கப்படுகிறது. டாடா டியாகோவின் விலை ரூ.5.65 லட்சம் முதல் 8.90 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Tata Tigor தள்ளுபடிகள் ஏப்ரல் 2024:


டியாகோ ஹேட்ச்பேக்கை போலவே அதன் உடன்பிறப்பான டைகோருக்கும் ரூ. 40,000 மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதுவும் XZ+ மற்றும் XM வகைகளுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற அனைத்து பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வகைகளுக்கும், ரூ.30,000 வரை மட்டுமே தள்ளுபடி பெறுகிறது. டியாகோவில் உள்ள 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினையே டைகோரும் பயன்படுத்துகிறது, மேலும் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உடன் கிடைக்கிறது.


Tata Altroz ​​தள்ளுபடிகள் ஏப்ரல் 2024:


பெட்ரோல் MT மற்றும் டீசல் வகையிலான Tata Altroz மாடலுக்கு,  இந்த மாதம் ரூ.35,000 வரை சலுகைகள் வழங்கப்படுகிறது. சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் டிசிஏ வகைகளுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. Altroz ​​தற்போது 1.2 லிட்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் பவர் ட்ரெயின்களுடன் கிடைக்கிறது. நெக்ஸான் போலவே 120hp, 170Nm, 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பெறுகிறது.


Tata Nexon ஏப்ரல் 2024 தள்ளுபடி:


MY2024  Tata Nexon தற்சமயம் ரொக்க தள்ளுபடிகள் இல்லாமல் வழங்கப்படுகிறது, இருப்பினும், இது ரூ. 15,000 எக்ஸ்சேஞ்ச்/ஸ்கிராப்பேஜ் பலன்களைப் பெறுகிறது. இதன் விலை ரூ.8.15 லட்சத்தில் இருந்து ரூ.15.80 லட்சம் வரை நிணயிக்கப்படுகிறது. டாடா நெக்ஸான் விரைவில் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுக்கான சிஎன்ஜி விருப்பத்தைப் பெறுகிறது, இது இந்தியாவின் முதல் டர்போசார்ஜ் செய்யப்பட்ட சிஎன்ஜி காராக மாறும் .


Car loan Information:

Calculate Car Loan EMI