Affordable 7 Seater Diesel SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜிஎஸ்டி திருத்தத்தால் 7 சீட்டர் டீசல் கார் மாடல்கள் மீது எவ்வளவு சேமிக்கலாம் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

7 சீட்டர் டீசல் எஸ்யுவிக்கள்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பின்பற்றப்படும் கடுமையான உமிழ்வு விதிகள் காரணமாக, டீசல் கார் மாடல்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்து வருகிறது. ஆனால், சில கார் உற்பத்தி நிறுவனங்கள் தற்போதும் குடும்ப பயன்பாட்டிற்கான சில எஸ்யுவிக்களை டீசல் எடிஷனில் வழங்கி வருகிறது. இந்த வாகனங்கள் இழுவைத் திறனுக்காக வாடிக்கையாளர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்திய சந்தையில் மலிவு விலையில் கிடைக்கக் கூடிய 7 சீட்டர் டீசல் எஸ்யுவிக்களை நீங்கள் தேடுபவராக இருந்தால், உங்களுக்கான டாப் 5 மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதுவும் வரும் 22ம் தேதி முதல் அமலாக உள்ள, ஜிஎஸ்டி திருத்தத்திற்குப் பிறகு இந்த கார்களின் விலை எப்படி இருக்கும் என்பதன் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

மலிவு விலை 7 சீட்டர் டீசல் எஸ்யுவிக்கள்:

5. டாடா சஃபாரி

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மஹிந்த்ரா நிறுவனத்தைச் சேராத ஒரே கார் மாடலாக, டாடாவின் சஃபாரி கார் மாடல் உள்ளது. நிறுவனத்தின் இன்ஜின் மாடல்களின் முதன்மையான காரான சஃபாரி, 14 வேரியண்ட்களில் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 170hp மற்றும் 350Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. அதற்கு 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதன் விலை தற்போது 15 லட்சத்து 49 ஆயிரத்தில் தொடங்கி 27 லட்சத்து 44 ஆயிரம் வரை நீள்கிறது. ஆனால், ஜிஎஸ்டி திருத்ததின் விளைவாக இந்த காரின் விலை, 14.66 லட்சம் தொடங்கி 25 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயாக மாற உள்ளது. அதன்படி, இந்த காரின் விலை 84 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 1.43 லட்சம் வரை குறைய உள்ளது.

மைலேஜ் - 14.1 முதல் 16.3 கிமீ வரை

4. மஹிந்த்ரா XUV700

மஹிந்த்ராவின் XUV700 கார் மாடல் தற்போது 7 சீட்டர் எடிஷனில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. 5 சீட்டர் எடிஷன் கடந்த மே மாதம் நிறுத்தப்பட்டு, 5 வேரியண்ட்களில் 7 சீட்டர் எடிஷன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் நிலையான ஆப்ஷனாக வழங்கப்பட, டாப் வேரியண்ட்களில் ஆல் வீல் ட்ரைவ் ஆப்ஷனும் கூடுதலாக வழங்கப்படுகிறது. இதில் இடம்பெற்றுள்ள 2.2 லிட்டர் டீசல் இன்ஜின்  ஃப்ரண்ட் வீல் ட்ரைவில் 155hp மற்றும் 360Nm ஆற்றலை உற்பத்தி செய்ய, ஆல் வீல் ட்ரைவில் 185hp மற்றும் 420 - 450 Nm ஆற்றலை உற்பத்தி செய்யும். 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரின் தற்போதைய எக்ஸ் - ஷோரூம் விலை 14.49 லட்சத்தில் தொடங்கி 25.89 லட்சம் வரை நீள்கிறது. வரும் 22ம் தேதி முதல் இந்த காரின் விலை 14.18 லட்சத்தில் தொடங்கி 23.78 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த காரின் விலை ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் வரை குறைகிறது.

மைலேஜ் - 16 முதல் 17 கிமீ வரை

3. மஹிந்த்ரா ஸ்கார்ப்பியோ என்

டாடாவின் சஃபாரி மற்றும் மஹிந்த்ராவின் XUV 700 மாடலை காட்டிலும், ஸ்கார்ப்பியோ என் மாடலின் எண்ட்ரி லெவல் விலை கணிசமாக குறைவாகும். இந்த மாடலானது  7 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. ரியர் வீல் வீல் ட்ரைவ் சிஸ்டம் நிலையானதாகவும், 4 வீல் ட்ரைவ் சில வேரியண்ட்களில் மட்டும் கூடுதல் ஆப்ஷனாகவும் வழங்கப்படுகிறது. இதில் இடம்பெற்றுள்ள 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ரியர் வீல் ட்ரைவில் 132hp மற்றும் 300Nm ஆற்றலை உற்பத்தி செய்ய, 4 வீல் ட்ரைவில் 175hp மற்றும் 400Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இந்த காரின் விலை ரூ.1.44 லட்சம் வரை குறைக்கப்பட்டு, ரூ.13.71 லட்சம் தொடங்கி ரூ.24.24 லட்சம் வரையிலான வரம்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மைலேஜ் - 15 முதல் 16 கிமீ வரை

2. மஹிந்த்ரா ஸ்கார்ப்பியோ க்ளாசிக்

இந்தியாவில் மற்றொரு பிரபலமான எஸ்யுவி கார் மாடலான ஸ்கார்ப்பியோ க்ளாசிக், உள்நாட்டில் தற்போது இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் இடம்பெற்றுள்ள 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆனது 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனை கொண்டு 132hp மற்றும் 300Nm ஆற்றலை உற்பத்தி செய்ய வல்லது. இதில் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன் இல்லை. இதன் விலை 1 லட்சம் ரூபாய் வரை குறைக்கப்பட்டு, 13.03 லட்சத்தில் தொடங்கி 16.76 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மைலேஜ் - 13  முதல் 16.5 கிமீ வரை

1. மஹிந்த்ரா பொலேரோ, பொலேரோ நியோ

மஹிந்த்ராவின் பொலேரோ மற்றும் அதற்கு இணையான மாடலான பொலேரோ நியோ ஆகியவை, இந்திய சந்தையில் கிடைக்கும் மலிவு விலை டீசல் 7 சீட்டர் எஸ்யுவிக்கள் ஆகும். இதில் பொலேரோ 3 வேரியண்ட்களில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனை மட்டுமே கொண்டுள்ளது. அதேநேரம், ப்ரீமியம் மாடலான பொலேரோ நியோ 4 வேரியண்ட்களில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனை கொண்டுள்ளது. இந்த மாடலின் விலை ரூ.1.27 லட்சம் வரை குறைக்கப்பட்டு வழக்கமான பொலேரோவின் விலை 9.28 லட்சத்தில் தொடங்கி 10.34 லட்சம் வரையிலும், பொலேரோ நியோவின் விலை 9.43 லட்சத்தில் தொடங்கி 11.52 லட்சம் வரையிலும் நீள்கிறது.

மைலேஜ் - 16 கிமீ வரை


Car loan Information:

Calculate Car Loan EMI