Top 5 Fastest Bikes: உலகின் அதிவேகமான மோட்டார்சைக்கிள்கள் பட்டியலில், மணிக்கு 400 கிலோ மிட்டர் வேகத்துடன் கவாசகி நின்ஜா H2R முதலிடத்தில் உள்ளது.


உலகின் அதிவேகமான மோட்டார்சைக்கிள்கள்:


இந்தியாவில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் தேவை அதிகரித்து வருவதால், உள்நாட்டு ஆட்டோமொபைல் சந்தையில் இரு சக்கர வாகனப் பிரிவு சமீப ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. இரு சக்கர வாகனங்களைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், மோட்டார் சைக்கிள்கள் என்றாலே அது ஒரு மலிவு போக்குவரத்தாக கருதுகிறோம். காரணம் நடுத்தர வர்க்க மக்களிடையே பெருகிக் காணப்படும்மோட்டார்சைக்கிள்களின் பயன்பாடுதான். இருப்பினும், கவாஸாகி மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டாராட் போன்ற சர்வதேச இரு சக்கர மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர்கள் வியக்கத்தக்க வேகத்தை அடையக்கூடிய சக்திவாய்ந்த இன்ஜின்களுடன் கூடிய விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்துகின்றன. அந்த வகையில் சர்வதேச சந்தையில் கிடைக்கக் கூடிய, அதிவேகமான டாப் 5 மோட்டார்சைக்கிள்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


கவாசகி நின்ஜா H2R:


Kawasaki Ninja H2R ஆனது உலகின் அதிவேக மோட்டார்சைக்கிள் ஆகும். காரணம் இது பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை வெறும் 2.93 வினாடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 400 கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்த முடியும். இதில் உள்ள 999 cc டர்போசார்ஜ்டு இன்ஜின் ஆனது 326 bhp மற்றும் 165 Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. Kawasaki Ninja H2R இந்தியாவில் ரூ.79.9 லட்சம் விலையில் கிடைக்கிறது.


சுசுகி ஹயபுசா


சுசுகி ஹயபுசா உலகின் அதிவேக மோட்டார் சைக்கிள்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 312 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்ட ஹயபுசா, பூஜ்ஜியத்திலிருந்து 100 கிமீ வேகத்தை வெறும் 3.86 வினாடிகளில் எட்டிவிடும். Suzuki Hayabusa 190 bhp மற்றும் 150 Nm டார்க் ஆற்றலை வெளிப்படுத்தும்,  1340 cc ஏர்- கூல்ட் இன்ஜினை கொண்டுள்ளது. Suzuki Hayabusa இந்தியாவில் ரூ.16.90 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Ducati Superleggera V4


Ducati Superleggera V4 மோட்டார் சைக்கிள் அதிகபட்சமாக  மணிக்கு 300 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தை எட்டும்.  Ducati Superleggera V4 பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 2 வினாடிகளில் எட்டிவிடும். இதில் உள்ள 1285 சிசி சூப்பர் குவாட்ரோ இன்ஜின் ஆனது,  217 பிஎச்பி மற்றும் 146 என்எம் ஆற்றலை உற்பத்தி செய்கிறது. விலையைப் பொறுத்தவரை, Ducati Superleggera V4 ஆனது இந்திய சந்தையில் ரூ.1.4 கோடி எனும் பிரீமியம் விலையில் கிடைக்கிறது.


கவாசாகி நின்ஜா எச்2


Kawasaki Ninja H2 என்பது நிஞ்ஜா H2R இன் சக்தி குறைந்த எடிஷனாகும். ஏனெனில் இது 3.1 வினாடிகளில் தான் பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும். அதிபட்சமாக மணிக்கு 300 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செலுத்தலாம். இதில் உள்ள 998 சிசி இன்ஜின் ஆனது 243 பிஎச்பி மற்றும் 141 என்எம் ஆற்றலை வெளிப்படுத்தும். Kawasaki Ninja H2 விலைகள் இந்தியாவில் ரூ.35 லட்சத்தில் தொடங்கி ரூ.42 லட்சம் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


Ducati Panigale V4 R


டுகாட்டி பனிகலே V4 பட்டியலில் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு மோட்டார்சைக்கிள்களைப் போலவே மணிக்கு 300 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தை அடையும் திறன் கொண்டது. Ducati Panigale V4 R ஆனது 0-100 km/h வேகத்தை வெறும் 3.1 வினாடிகளில் எட்டிவிடும். இந்த வாகனத்தில் 207 பிஎச்பி மற்றும் 118 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 998 சிசி இன்ஜினை கொண்டுள்ளது. இந்தியாவில் ரூ.69.9 லட்சம் விலையில் கிடைக்கிறது.


BMW M 1000 RR:


BMW M 1000 RR ஆனது 314 km/h வேகத்தை எட்டும் திறன் கொண்டது மற்றும் 0-100 km/h இலிருந்து வெறும் 3.1 வினாடிகளில் வேகத்தை எட்டும். இதில் உள்ள 999சிசி இன்ஜின், இன்லைன் 4-சிலிண்டர் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 209 பிஹெச்பி மற்றும் 113 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. BMW M 1000 RR இந்தியாவில் அதன் தொடக்க விலை ரூ. 49 லட்சம் ஆகவும், அதிகபட்சமாக ரூ. 55 லட்சம் ஆகவும் உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI