கடந்த ஜூன் மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் எந்தெந்த கார்கள் விற்பனையில் டாப் 3 இடங்களைப் பிடித்துள்ளன என்பதைப் பார்க்கலாம்.


மக்களின் ப்ராண்ட்:


இந்திய கார் சந்தையின் நம்பர் ஒன் இடத்தை தன் வசம் பல ஆண்டுகளாக வைத்திருக்கும் மாருதி சுசுகி நிறுவனம் புதுப்புதுக்கார்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி கார் சந்தையில் மற்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியாளராக இருக்கிறது. என்னதான் பல கார் நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கார்களை விற்பனை செய்தாலும் மாருதி சுசுகி இடத்தை அடைய கடும் போட்டி நிலவுகிறது. மக்கள் மனதைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப கார்களை தயாரித்து விற்பனை செய்வதும், மக்கள் மனதில் நிலைத்துவிட்ட ஒரு ப்ராண்ட் என்பதாலும், தன் வாழ்நாளில் ஒரு காரை வாங்கிவிடவேண்டும் என்று நினைப்பவர்களது கனவை நிறைவேற்றும் வகையில் குறைந்த விலை கார்கள் முதல் விவிஐபிகளுக்கான கார்கள் வரை தயாரிப்பதால் தான் அந்த இடத்தை மாருதியால் இத்தனை ஆண்டுகளாக தக்க வைத்திருக்க முடிகிறது.


ஆனால், கொரோனாவிற்குப் பிறகு செமிகண்டக்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதால் கார் உற்பத்தியில் சிறிது சுணக்கம் ஏற்பட்டது. ஆனால்ம் கார் விற்பனையில் நம்பர் ஒன் இடத்தைத் தக்கவைத்திருக்கிறது மாருதி நிறுவனம். கடந்த மாதத்தில் மாருதியின் எந்தெந்த கார்கள் விற்பனையில் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன என்று பார்க்கலாம்.


 


மாருதி சுசுகி வேகன் ஆர்:


மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. மே மாதத்தைப் போலவே ஜூன் மாதத்திலும் இந்தியாவில் அதிகம் விற்பனையான காராக இருக்கிறது வேகன் ஆர். கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் 19,447 கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில் இந்த ஆண்டு 19,190 கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனையில் ஒரு சதவீதம் சரிவை சந்தித்திருக்கிறது வேகன் ஆர். இந்த காரில் பெட்ரோலை விட சிஎன்ஜி-எரிபொருளில் இயங்கும் கார்களுக்கு தான் மக்களிடம் வரவேற்பு இருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.




மாருதி சுசுகி ஸ்விஃப்ட்:


கார் வாங்க வேண்டும் என்று எண்ணுபவர்களின் பல ஆண்டு தேர்வாக மாருதி ஸ்விஃப் ஹேட்ச்பேக் காரே இருந்து வந்திருக்கிறது. ஆனால், கார் சந்தையில் பல்வேறு கார்கள் விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் இந்த கார் மாடல் விற்பனை ஒன்பது சதவீதம் அளவிற்கு சரிவை சந்தித்திருக்கிறது. கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 17,727 கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு 16,213 கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. இந்த சரிவுக்கு செமிகண்டக்டர்கள் பற்றாக்குறை, எலக்ட்ரானிக் உபகரணங்கள் பற்றக்குறை போன்றவையே காரணம் என்றும் கூறப்படுகிறது. 




மாருதி சுசுகி பலீனோ:


மாருதி சுசுகியின் ஹேட்ச்பேக் மாடல் கார்களில் ப்ரீமியம் காரான பலீனோ விற்பனையில் மூன்றாம் இடத்தைப் பிடித்து முன்னேறியிருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 14,701 கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில் இந்த ஆண்டு 16,103 கார்கள் விற்பனையாகியுள்ளது. விற்பனையில் 10 சதவீதம் உயர்வை சந்தித்திருக்கிறது இந்த மாடல். விற்பனையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள ஸ்விஃப்ட்டை விட 110 கார்கள் தான் விற்பனையில் குறைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.




Car loan Information:

Calculate Car Loan EMI