November Car Launch: நவம்பர் மாதத்தில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ள, புதிய கார் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


ஆட்டோமொபைல் சந்தை:


அக்டோபரில் பல ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் புதிய கார்களை சிறந்த பாதுகாப்பு. செயல்திறன் மற்றும் கவர்ச்சிகரமான புதிய வடிவமைப்புகளுடன் அறிமுகப்படுத்தின. புதிய டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகியவை 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு, கருப்பு-தீம் கொண்ட நிசான் மேக்னைட் குரோ, BMW X4 M40i, BMW i7 M70 xDrive, BMW 740d M. Audi S5 ஸ்போர்ட்பேக் பிளாட்டினம் வேரியண்ட் என ஏராளமான கார்கள் அறிமுகமாகின. அதோடு,  நிசான் ஹைப்பர் ஃபோர்ஸ் EV போன்ற அடுத்து வெளியாக உள்ள கார்களின் கான்செப்ட்களும் வெளியாகின. அதேநேரம், அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட சில கார் மாடல்களின் வெளியீடும் திடீரென ரத்தானது.


நவம்பர் மாத கார் வெளியீடு:


இந்நிலையில் நவம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் வெளியாக உள்ள கார்களின் என்னென்ன என்பதை இங்கே அறியலாம். இந்த மாதம் பண்டிகை காலமாக இருப்பதால் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும், எற்கனவே அறிவித்ததை காட்டிலும் முன்னதாகவே தங்களது  புதிய மாடல் வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. சில நிறுவனங்கள் தங்களது புதிய கார் தொடர்பான அறிவிப்பை நவம்பரில் வெளியிட்டு, டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில் நவம்பரில் வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ள, கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.  


கார் மாடல் விவரங்கள்:


Mercedes-AMG C43. GLC Coupe மற்றும் GLE ஃபேஸ்லிஃப்ட் : இதுதொடர்பான தகவல்களின்படி,  புதிய செடான் சிக்ஸ் சிலிண்டர் 2996cc பெட்ரோல் இன்ஜினுடன் 384bhp மற்றும் அதிகபட்சமாக 520Nm டார்க்கை உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது. தொடக்க விலையே ரூ.80 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  Mercedes-Benz GLE Facelift என்பது ஜெர்மன் சொகுசு ஆட்டோமொபைல் உற்பத்தியாளரின் புதிய SUV ஆகும். இது நான்கு மற்றும் ஆறு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் அறிமுகப்படுத்தப்படலாம்.  புதிய Mercedes-AMG C43 மற்றும் Mercedes-Benz GLE ஃபேஸ்லிஃப்ட் நவம்பர் 2 அன்றும்,  Mercedes-Benz GLC கூபே நவம்பர் மாதத்திற்குள்ளும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


Toyota Glanza Sports: டொயோட்டாவின் புதிய Glanza Sports நவம்பர் 2023 இல் இந்தியாவிற்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய ஸ்போர்ட்ஸ் வேர்யண்ட் முந்தைய Toyota Glanza மாடலை விட சிறந்த அம்சங்களை கொண்டிருக்கலாம். இந்த கார் 1179சிசி பெட்ரோல் இன்ஜினுடன் வெளியிடப்படும் என்றும்,  ரூ.7 முதல் 9.50 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


Toyota Urban Cruiser Taisor: Toyota Taisor அக்டோபரில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அது தாமதமாகியுள்ள நிலையில், நவம்பரில் இது வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இதன் விலை ரூ.12 முதல் 16 லட்சம் வரை இருக்கலாம்.


Tata Punch EV: Tata Punch EV கார் அக்டோபரில் வரும் என பல்வேறு வதந்திகள் வெளியானது. இந்நிலையில் டாடாவின் புதிய மின்சார கார் நவம்பர் மாதத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  காலநிலை கட்டுப்பாடு, புதிய எல்.ஈ.டி விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்  போன்ற பல்வேறு முக்கிய அம்சங்களை கொண்ட, இந்த காரின் விலை 9 முதல் 13 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேற்குறிப்பிடப்பட்ட கார் மாடல்களை தவிர, ஜீப் அவெஞ்சர், BYD சீல், லெக்ஸஸ் எல்எம், மஹிந்திரா பொலிரோ நியோ பிளஸ்,  ஃபோர்ஸ் மோட்டார்ஸ் 5-டோர் கூர்க்கா,  டாடா கர்வ், ஹூண்டாய் வென்யூ சிஎன்ஜி உள்ளிட்ட கார் மாடல்களும் நவம்பர் 2023 இல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Car loan Information:

Calculate Car Loan EMI