Lunar Eclipse: 2023ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணமானது நேற்று நள்ளிரவு 11.31 மணி முதல் இன்று அதிகாலை 3.56 மணி வரை  நீடித்தது.

சந்திர கிரகணம்:

சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. சந்திரனும், சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் நிகழும். பூமியின் நிழல் சந்திரனின் ஒரு பகுதியை மட்டும் மறைக்கும்போது ஒரு பகுதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும், சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் நிகழும். பொதுவாக, ஆண்டுக்கு இரண்டும் சந்திர கிரகணமும், இரண்டு சூரிய கிரகணமும் நிகழும். பொதுவாக இரவு நேரத்தில் வரும் சந்திர கிரகணமும், பகல் நேரத்தில் வரும் சூரிய கிரகணமும் தான் இந்தியாவில்  தெரியும். 2023ஆம் ஆண்டில் முதல் சந்திர கிரகணம் மே 5ஆம் தேதி சித்ரா பௌர்ணமி தினமான வெள்ளிக்கிழமை நிகழ்ந்தது. இது பகுதி சந்திர கிரகணமாக வந்தது. 

இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்:

இதைத் தொடர்ந்து நேற்று  சனிக்கிழமை நள்ளிரவு 11.31 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 3.56 மணி வரை சந்திர கிரகணம் நீடித்தது. சந்திர கிரகணம் தோஷ காலமாக கருதப்படுவதால் நேற்று இந்தியாவில் உள்ள அனைத்து கோவில்களில் நடைகளும் சில மணி நேரமும் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இரவு 7  மணி முதலே அங்காங்கே கோயில் நடை சாத்தப்பட உள்ளது. அதேபோல, திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை நேற்று இரவு 7.05 மணிக்கு சாத்தப்பட்டது. இன்று அதிகாலை 3.15 மணி வரை கோவில் மூடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், நேற்று  சனிக்கிழமை நள்ளிரவு 11.31 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 3.56 மணி வரை சந்திர கிரகணம் நீடித்தது. டெல்லியில் அதிகாலை 1.05 மணிக்கு நன்றாக சந்திர கிரகணத்தை பார்க்க முடிந்தது. அதிகாலை 1.44 மணிக்கு முழுமையாக சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடிந்தது.

மேலும், சில இடங்களில்  பைனாகுலராலும் பார்க்க முடிந்தது.  இதேபோல, இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பார்க்கக் கூடியதாக இருந்தது. எனவே, இதுவே இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் ஆகும்.  இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணம் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முழுமையான சந்திர கிரகணமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.