Biggest Engine Cars: பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சந்தைப்படுத்தப்பட்டுள்ள கார்களில், சக்திவாய்ந்த இன்ஜின் கொண்ட மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


ஆஸ்டன் மார்ட்டின் ஒன்-77:


பிரிட்டிஷ் உற்பத்தியாளரான ஆஸ்டன் மார்ட்டின் தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்போர்ட்ஸ் காரான, ஒன் - 77 மாடலை கடந்த 2009ம்  ஜெனிவா மோட்டார் ஷோ நிகழ்ச்சியில் முதன்முறையாக காட்சிப்படுத்தியது. பிராண்டின் சிக்னேட்சர் பாணியைப் பின்பற்றி, அந்த கார் ஒரு முழு அளவிலான செயல்திறன் மிக்க இயந்திரமாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 7.3-லிட்டர் வடிவத்தில் முன்பக்கமாக பொருத்தப்பட்ட,  V12 இன்ஜின் ஆனது  750 hp ஆற்றலையும்,  749 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. 20 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த கார் லிமிடெட் எடிஷனாக உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


புகாட்டி வேய்ரான்:


கண்ணை கவரும் அதிவேகத்தை அடைவதால் பிரபலமாக இருந்த இந்த கார், அதற்கு இணையான விலையயும் கொண்டிருந்தது. 987 ஹெச்பி பவர் மற்றும் 1250 என்எம் டார்க் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 8.0 லிட்டர் டபிள்யூ16 இன்ஜின் காரணமாக இந்த கார் இந்த சிறந்த செயல்திறனை எட்டியது. அதன் திறன்கள் காரணமாக, இந்த இன்ஜின் ஆனது வேய்ரானின் அடுத்த தலைமுறை வாகனங்களிலும் பயன்படுத்தப்பட்டது. 35 கோடி ரூபாயை தொடக்க விலையாக கொண்ட இந்த காரை, இந்தியாவில் ஒருவர் கூட வாங்கவில்லை என கூறப்படுகிறது.


காடிலாக் எல்டோராடோ:


தொலைந்துபோன தங்க நகரத்தின் பெயரிடப்பட்ட இந்த கிளாசிக் அமெரிக்க கார், பல தசாப்தங்களாக ஒரு சின்னமாக உள்ளது. 1953 இல் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட கார், 1970 இல் அறிமுகப்படுத்தப்பட்ட அதன் எடிஷனில் ஒரு பெரிய 8.2-லிட்டர் V8 இயந்திரத்தைப் பெற்றது. 2002ம் ஆண்டு இந்த மாடல் கார் உற்பத்தியில் இருந்து விலக்கப்பட்டது.


புகாட்டி டூர்பில்லன்:


புகாட்டி டூர்பில்லன் என்பது வெய்ரான் மற்றும் சிரோனின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் பிராண்டின் சமீபத்திய மாடல் ஆகும். இந்த கார் மூன்று மின்சார மோட்டார்கள் மூலம் புதிய 8.3 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் V16 இன்ஜினுடன் வருகிறது. இவை அனைத்தையும் சேர்த்து, காரின் வசம் 1800 ஹெச்பி உள்ளது. இதன் விலை இந்திய சந்தையில் சுமார் 34 கோடி ரூபாய் ஆகும்.


டாட்ஜ் வைப்பர் விஎக்ஸ் ஐ


டாட்ஜ் வைப்பர் என்பது உலகின் மிக உயர்ந்த வி10 இன்ஜின் கார்களில் ஒன்றாகும். 1992 முதல் 2017 வரை தயாரிக்கப்பட்ட இந்த காரில் இடம்பெற்ற 8.4 லிட்டர் V10 இன்ஜின், 640 hp ஆற்றலையும் 813 Nm உச்ச முறுக்குவிசையையும் உருவாக்கும் திறன் கொண்டது. இந்த பவர் யூனிட்டானது அலுமினியத்திலிருந்து கட்டப்பட்டது மற்றும் கிறைஸ்லர் LA இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது.


புகாட்டி ராயல்


1927 முதல் 1933 வரை தயாரிக்கப்பட்ட புகாட்டி ராயல் அதன் காலத்தின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் விலையுயர்ந்த தயாரிப்பு கார்களில் ஒன்றாகும். கூடுதலாக, இது ஒரு அரிதான மாடலாகும். ஏனெனில் இவற்றில் 6 மட்டுமே பெரும் மந்தநிலையின் போது விற்கப்பட்டன. இந்த காரில் 12.7 லிட்டர் இன்லைன்-8 இன்ஜின் இருந்தது. இது 300 ஹெச்பி ஆற்றலையும், 1186 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்தது


Car loan Information:

Calculate Car Loan EMI