Budget Cars Mileage: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிக மைலேஜ் தரக்கூடிய, 6 சிறந்த பட்ஜெட் கார்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.


மாருதி சுசூகி ஸ்விஃப்ட்:


மாருதி சுசூகி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஸ்விஃப்ட் வேரியண்டானது, 1.2L Z-சீரிஸ் இன்ஜினுடன் சந்தைப்டுத்தப்பட்டுள்ளது. இது மிகவும் திறமையானது. லிட்டருக்கு 25.75 கிமீ மைலேஜ் வழங்குகிறது. அதன்படி, இதில் உள்ள 37 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கை ஒரு முறை நிரப்பினால், இடைநிற்றல் இன்றி 952.75 கிமீ தூரம் பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. ஸ்விஃப்ட்டின் ஆரம்ப விலை ரூ.6.49 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


ஹூண்டாய் எக்ஸ்டர்:


ஹூண்டாய் எக்ஸ்டர் குறைந்த காலத்திலேயே இந்தியாவில் விற்பனையாகும் மிகவும் பிரபலமான வாகனங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இதில் 1.2L NA பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. லிட்டருக்கு 19.4 kmpl மைலேஜ் வழங்குகிறது. அதன்படி, இதில் உள்ள 37 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கை முழுமையாக நிரப்பினால், இடைநிற்றல் இன்றி 717.8 கி.மீ. தூரம் பயணிக்கலாம் என தரவுகள் தெரிவிக்கின்றன. எக்ஸ்டரின் ஆரம்ப விலை ரூ.6.12 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


ஹூண்டாய் கிராண்ட் i10 NIOS


ஹூண்டாய் கிராண்ட் i10 NIOS நக்ர்ப்புறத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த காராகும். இது 1.2L NA பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. லிட்டருக்கு 19.83 கிமீ மைலேஜ் வழங்கும், இந்த வாகனத்தின் 37 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கை நிரப்பினால் 733.71 கி.மீ., மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. Grand i10 NIOS இன் ஆரம்ப விலை ரூ.5.92 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


டாடா பஞ்ச்


இந்தியாவில் தற்போது அதிகம் விற்பனையாகும் கார்களில் டாடா பஞ்ச் மாடலும் ஒன்றாகும். 1.2L NA பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ள இந்த கார், லிட்டருக்கு 20.09 கி.மீ., மைலேஜ் வழங்குகிறது.  அதன்படி,  37 லிட்டர் கொள்ளளவு கொண்ட இதன் எரிபொருள் டேங்கை நிரப்பினால், ஒரே அடியாக 743.33 கி.மீ தூரம் பயணிக்கலாம்.  பஞ்சின் ஆரம்ப விலை ரூ.6.12 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


டாடா டியாகோ:


டாடா டியாகோ நகர்ப்புற பயணத்திற்கு ஏற்ற மற்றொரு சிறந்த கார் ஆகும், இது பயணிகளுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. 1.2L NA பெட்ரோல் இன்ஜினுடன், லிட்டருக்கு 20.09 கி.மீ., மைலேஜ் வழங்குகிறது. அதன்படி, 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கை நிரப்பினால் ஒரே அடியாக 703.15 கி.மீ. தூரம் பயணிக்கலாம். டியாகோவின் ஆரம்ப விலை ரூ.5.65 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மாருதி சுசூகி வேகன் ஆர்:


மாருதி சுசூகி வேகன் ஆர் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாகும். இது 1.0L NA பெட்ரோல் அல்லது 1.2L NA பெட்ரோல் இன்ஜினுடன் லிட்டருக்கு, 24.35 கி.மீ., மைலேஜ் வழங்குகிறது.  அதன்படி, இதன் எரிபொருள் டேங்கின் முழு கொள்ளளவான 35 லிட்டருக்கு எரிபொருளை நிரப்பினால்,  852.25 கி.மீ., மைலேஜ் வழங்குகிறது என தரவுகள் தெரிவிக்கின்றன. வேகன் ஆர் காரின் ஆரம்ப விலை ரூ.5.54 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI