Electric Vehicle Battery Life: மின்சார வாகனங்களின் பேட்டரி ஆயுளை அதிகரிப்பதற்கான டாப் 5 ஆலோசனகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மின்சார வாகனங்களின் பேட்டரி ஆயுள்:
உலகளாவிய மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிவேக வளர்ச்சியை அனுபவித்து வருகிறது. 2040 க்குள் உலகளாவிய பயணிகள் வாகன விற்பனையில், 60% க்கும் அதிகமான மின்சார வாகனங்கள் (EV கள்) பிரதிநிதித்துவப்படுத்தும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்ப முன்னேற்றங்கள், சுற்றுச்சூழல் பரிசீலனைகள் மற்றும் சாதகமான அரசாங்கக் கொள்கைகள் ஆகியவற்றின் கலவையானது EV பயன்பாட்டில் இந்த எழுச்சியைத் தூண்டுகிறது. இந்த சூழ்நிலையில் பேட்டரி தான் எந்தவொரு மின்சார வாகனத்திற்கு இதயமும் ஆன்மாவும் ஆகும். வாகனத்தின் மொத்த செலவில் கால் பகுதி வரை பேட்டரிக்கானது ஆகும். இந்த குறிப்பிடத்தக்க முதலீட்டைக் கருத்தில் கொண்டு, உங்கள் EV பேட்டரியின் ஆயுளை அதிகரிக்க விரும்புவது இயற்கையானது மற்றும் அவசியமானது ஆகும். அதற்கான சில ஆலோசனைகள் தான் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
பேட்டரி ஆயுளை நீட்டிக்க ஆலோசனைகள்:
1. கடுமையான வெப்பத்தின் வெளிப்பாட்டைக் குறைக்கவும்:
அமெரிக்கன் ஆட்டோமொபைல் அசோசியேஷனின் கூற்றுப்படி, சுற்றுப்புற வெப்பநிலை 20°F அல்லது அதற்குக் கீழே குறையும் போது சராசரி மின்சார காரின் இயக்க வரம்பு 41% குறைகிறது.
அதிகப்படியான வெப்பநிலை சூழலில் அடிக்கடி வாகனத்தை நிறுத்துவது, குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்தும். காரில் உள்ள தானியங்கி வெப்பநிலை கட்டுப்பாட்டு அமைப்பு, உகந்த வெப்பநிலையை பராமரிக்க பேட்டரியை தேவையில்லாமல் பயன்படுத்தலாம்.
தேவையற்ற முறையில் பேட்டரி ட்ரெயின் ஆவதை தடுக்க, உங்கள் மின்சார காரை நிழலில் நிறுத்தலாம் அல்லது வெப்ப மேலாண்மை அமைப்பு கிரிட் பவரைச் சார்ந்து சார்ஜ் செய்யலாம். உங்கள் காரை சார்ஜ் செய்வதற்கு முன் குளிர்விப்பதும் உங்கள் EV பேட்டரியின் ஆயுளை நீட்டிக்க உதவும். வெப்பமான காலநிலையில், ஆக்ட்வ் கூலிங் முறைகளை பயன்படுத்துவதும் பேட்டரி ஆயுளை மேலும் அதிகரிக்கலாம்.
2. 100% சார்ஜ் நிலையில் அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்கலாம்
முழு சார்ஜ் சிறந்ததாகத் தோன்றினாலும், அது உண்மையில் உங்கள் பேட்டரியின் ஆயுளைக் குறைக்கும். தினசரி பயன்பாட்டிற்கு உங்கள் பேட்டரி சார்ஜ் 20% முதல் 80% வரை இருக்க வேண்டும், நீண்ட பயணங்களுக்கு மட்டுமே முழுமையாக சார்ஜ் செய்வதை பின்பற்றுங்கள். இந்த சமநிலை உகந்த பேட்டரி ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது
3. பேட்டரி முழுமையாக ட்ரெயின் ஆவதை தவிர்க்கலாம்
உங்கள் பேட்டரியின் சார்ஜ் 10 சதவிகிதத்திற்கும் கீழே குறைவதை தவிர்ப்பது நல்லது. மேலும் 80-90%க்கு மேல் சார்ஜ் செய்யாமல் இருங்கள். குறைந்த புள்ளிக்கு சார்ஜ் சரிவது பேட்டரியை சேதப்படுத்தும் மற்றும் காலப்போக்கில் அதன் திறனைக் குறைக்கும், இதன் விளைவாக முழுமையான சேதம் ஏற்படும்.
4. அவசரநிலைகளுக்கு மட்டுமே ஃபாஸ்ட் சார்ஜிங் முறை:
வேகமாக சார்ஜ் செய்வது வசதியானது என்றாலும், அது பேட்டரியை கஷ்டப்படுத்தி, காலப்போக்கில் எலக்ட்ரோடு பொருட்களை சிதைத்துவிடும். முடிந்தவரை நிலையான சார்ஜிங்கைப் பயன்படுத்தினால், எட்டு ஆண்டுகளில் உங்கள் பேட்டரி ஆயுளை 10% வரை நீட்டிக்க முடியும். அவசரநிலை அல்லது சாலைப் பயணங்களின் போது மட்டும் வேகமான சார்ஜிங்கை பயன்படுத்துங்கள்.
5. அதிகபடியான ஆக்சிலரேஷனுக்கு “நோ”
வேகமான ஆக்சிலரேஷன், கடினமான பிரேக்கிங் மற்றும் மோசமாக ஓட்டுதல், பேட்டரியை விரைவாகக் குறைத்து, அதன் எலக்ட்ரோடு பொருட்களில் தேய்மானத்தை ஏற்படுத்தும். பேட்டரி ஆயுளைப் பாதுகாக்கவும் ஒட்டுமொத்த செயல்திறனை அதிகரிக்கவும் சீராக ஓட்டவும் மற்றும் நிலையான வேகத்தை பராமரிக்கவும்.
Car loan Information:
Calculate Car Loan EMI