EV Cars Diwali 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மலிவு விலையில் கிடைக்கக் கூடிய, டாப் 5 மின்சார கார்களின் விவரங்களை இங்கே அறியலாம்.

Continues below advertisement

மலிவு மின்சார கார்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மின்சார கார்களின் விற்பனை என்பது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு மட்டுமானதாக இல்லாமல், பட்ஜெட்டில் கார் வாங்க விரும்புபவர்களுக்கும் இது ஒரு நல்ல தேர்வாக மாறி வருகிறது. முதல் முறையாக கார் வாங்க விரும்புபவர்களும், பெட்ரோல்/டீசல் எடிஷன்களில் இருந்து மாற விரும்புவோரும் மின்சார கார்களை பரிசீலிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் எதிர்காலத்திற்கு ஏற்ற ஸ்மார்ட் அம்சங்கள், குறைந்த இயக்க செலவுகளை கொண்டு, இந்திய சந்தையில் 15 லட்சம் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் மின்சார கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

தீபாவளி சலுகையுடன் மின்சார கார்கள்:

1. டாடா டியாகோ மின்சார கார்

முதல்முறையாக மின்சார காரை வாங்க விரும்புவோருக்கு டாடா டியாகோ ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இதன் விலை ரூ.7.99 லட்சத்தில் தொடங்கும். இது நாட்டின் மலிவு விலை மின்சார காராகவும், நகர்ப்புறங்களில் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும் உள்ளது.  இதில் இடம்பெற்றுள்ள 19.2KWh மற்றும் 24 KWh பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்தால், அவை முறையே 250 மற்றும் 315 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. ஃபாஸ்ட் சார்ஜரில் 10 முதல் 80 சதவிகிதத்தை வெறும் 58 நிமிடங்களில் எட்டிவிடும். இந்த காம்பேக்ட் 5 சீட்டரானது சிறிய குடும்பங்களுக்கு ஏற்றதாகவும், 240 லிட்டர் பூட் ஸ்பேஸ் உடன் ஸ்மார்ட் இன்ஃபோடெயின்மெண்ட் வசதியை கொண்டுள்ளது. தீபாவளியை ஒட்டி இந்த காரின் மீது டாடா நிறுவனம் ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் வரையிலான சலுகைகளை அறிவித்துள்ளது.

Continues below advertisement

2. டாடா பஞ்ச் மின்சார கார்

டாடா நிறுவனம் சார்பில் அதிகளவில் விற்பனையாகும் கார்களில் ஒன்றான பஞ்ச், எஸ்யுவி ஸ்டைலிங்குடன் மின்சார காருக்கான செயல்திறனையும் பெற்றுள்ளது. இதன் விலை ரூ.9.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. வலுவான டிசைன், அதிகப்படியான க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டு இந்திய சாலைகளுக்கு ஏற்றதாக திகழ்கிறது. 25 KWh மற்றும் 35 KWh  பேட்டரி ஆப்ஷன்களை கொண்டு, அவற்றை முழுமையாக சார்ஜ் செய்தால் முறையே 315 மற்றும் 421 கிலோ மீட்டர் ரேஞ்சை அளிக்கிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் வெறும் 56 நிமிடங்களில் இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்யலாம். சன்ரூஃப், 6 ஏர்பேக்குகள் மற்றும் ஹர்மன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகிய அம்சங்கள் இந்த காரில் உள்ளன. தீபாவளியை ஒட்டி இந்த காரின் மீதும் டாடா நிறுவனம் ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் வரையிலான சலுகைகளை அறிவித்துள்ளது.

3. எம்ஜி விண்ட்சர் மின்சார கார்:

நாட்டிலேயே அதிகம் விற்பனையாகும் காராக உருவெடுத்துள்ள விண்ட்சர், அதன் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுக்காக சிறந்து விளங்குகிறது. இதன் விலை ரூ.9.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. அழகானது, உயர் தொழிநுட்பம், சொகுசுக்கு ஏற்ற வகையிலான வடிவமைப்பை கொண்டுள்ளது. 38 KWh மற்றும் 52.9 KWh  பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டு, 331 தொடங்கி 449 கிலோ மீட்டர் ரேஞ்சை வழங்குகிறது.  இதன் உட்புறத்தில் பெரிய 15.6 இன்ச் டச் ஸ்க்ரீன், பனோரமிக் க்ளாஸ் ரூஃப், வெஹைகிள் டூ வெஹைகிள் சார்ஜிங் ஆப்ஷன் போன்ற அம்சங்களும் நிறைந்துள்ளன. தீபாவளிக்கு என தனிப்பட்ட சலுகைகள் எதுவும் இந்த காரின் மீது அறிவிக்கப்படவில்லை.

4. சிட்ரோயன் eC3

வேடிக்கையான ஒரு காரை தேடுகிறீர்கள் என்றால், ஃப்ரெஞ்சு ப்ராண்டானா சிட்ரோயனின் eC3 உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இதன் விலை ரூ.11.99 லட்சத்தில் தொடங்குகிறது. தனித்துவமான வடிவமைப்பு மற்றும் வசதியான சவாரி தரத்திற்கு பெயர் பெற்ற eC3, 29.2 KWh பேட்டரியை கொண்டு 320 கிமீ ரேஞ்ச் அளிக்கிறது. தினசரி நகர பயன்பாட்டிற்கு ஏதுவான இந்த காரை, டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 57 நிமிடங்களில் 10 முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யலாம். இதில் 10.2 இன்ச் டச்ஸ்க்ரீன், வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. தீபாவளியை ஒட்டி இந்த காரின் மீது சிட்ரோயன் நிறுவனம் 40 ஆயிரம் ரூபாய் வரையில் சலுகைகளை அறிவித்துள்ளது.

5. டாடா நெக்ஸான் மின்சார கார்:

டாடா நெக்ஸான் EV இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மின்சார SUVகளில் ஒன்றாக விளங்குகிறது, இதன் விலை ரூ.12.49 லட்சத்தில் தொடங்குகிறது. இது சக்தி வாய்ந்தது, விசாலமானது மற்றும் அம்சங்கள் நிறைந்தது. இந்த SUV 30.2 kWh மற்றும் 45 kWh என்ற இரண்டு பேட்டரி பேக்குகளுடன் கிடைக்கிறது, இது 312 கிமீ முதல் 489 கிமீ வரை வரம்பை வழங்குகிறது. 9 வினாடிகளுக்குள் பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும்.  360° கேமரா, சன்ரூஃப், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் உயர் டிரிம்களில் ADAS பாதுகாப்பு தொழில்நுட்பம் போன்ற அம்சங்கள் நிறைந்துள்ளன.


Car loan Information:

Calculate Car Loan EMI