Hyundai Creta Competition: ஆதிக்கம் செலுத்தும் ஹுண்டாய் கிரேட்டா - டஃப் கொடுக்கும் டாப் 5 கார் மாடல்கள்

Hyundai Creta Competition: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிரேட்டா காருக்கு, கடும் போட்டியாக உள்ள கார் மாடல்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

Hyundai Creta Competition: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிரேட்டா காருக்கு, கடும் போட்டியாக உள்ள டப் 5 கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

ஹுண்டாய் கிரேட்டா:

உலகளாவிய ஆட்டோமொபைல் சந்தைகள் தற்போது SUV கள் மீது அதிக ஆர்வம் கொண்டிருக்கின்றன. அதிலும் இந்தியாவில் குறிப்பாக மிட்-சைஸ் SUV பிரிவு அபார வளர்ச்சி கண்டுள்ளது. அந்த வகையில் உள்நாட்டில் மிகவும் வெற்றிகரமான SUVகளில் ஒன்றாக,  ஹூண்டாய் கிரேட்டா உள்ளது. ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு ஹுண்டாய் கிரேட்டா கார் மாடல் விற்பனையாவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு வாகனத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. 1.5L NA பெட்ரோல், 1.5L டர்போ பெட்ரோல் அல்லது 1.5L டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. 6-ஸ்பீடு மேனுவல், ஒரு CVT, 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7-ஸ்பீடு DCT ஆகிய டிரான்ஸ்மிஷன் விருப்பங்களும் கிடைக்கிறது.  கிரேட்டாவின் ஆரம்ப விலை ரூ.10.99 லட்சமாக உள்ளது. ஆனாலும், கிரேட்டாவிற்கே போட்டியாக இந்தியாவில் 5 கார் மாடல்கள் உள்ளன. அவற்றின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 

ஹோண்டா எலிவேட்

ஹோண்டா எலிவேட் இந்தியாவில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மாடல் என்பதோடு, மிகவும் வெற்றிகரமான காராகவும் உள்ளது. இது மிகவும் வசதியான சவாரி மற்றும் கையாளுதல் தொகுப்பைக் கொண்டுள்ளது. இதில் உள்ள 1.5L i-VTEC இன்ஜின் ஆனது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. எலிவேட்டின் ஆரம்ப விலை ரூ.11.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா

மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா மிகவும் பிரபலமானது மற்றும் மிகவும் நம்பகமான 1.5L கே-சீரிஸ் இன்ஜின் அல்லது ஹைப்ரிட் 1.5L இன்ஜினுடன் வருகிறது, இது மிகவும் திறமையானது. கிராண்ட் விட்டாரா ஒரு வாகனத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. AWD விருப்பத்தையும் பெற்றுள்லது. கிராண்ட் விட்டாராவின் ஆரம்ப விலை ரூ.10.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கியா செல்டோஸ்

கியா செல்டோஸ் அண்மையில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்டது மற்றும் அனைத்து தொழில்நுட்ப அம்சங்களுடனும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது 1.5L இயற்கையான ஆஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5L டர்போ பெட்ரோல் மற்றும் 1.5L டீசல் இன்ஜின் விருப்பத்துடன் வருகிறது. டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் ஒரு iMT, ஒரு CVT, ஒரு DCT மற்றும் ஒரு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் ஆகிய ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. செல்டோஸின் ஆரம்ப விலை ரூ.10.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்கோடா குஷாக்

ஸ்கோடா குஷாக் ஒரு அற்புதமான ஆர்வத்தை தூண்டு ஒரு வாகனமாகும். இது பயணிகளுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 1.0L டர்போ-பெட்ரோல் அல்லது 1.5L டர்போ பெட்ரோல் இன்ஜின் விருப்பத்தைக் கொண்டுள்ளது. தற்போது குஷாக்கிற்கான விலைகள் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி இதன் ஆரம்ப விலை ரூ.10.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் யூசர் ஹைரைடர்

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கிராண்ட் விட்டாரா போன்ற தளத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் மிகவும் நம்பகமான 1.5L k-சீரிஸ் இன்ஜின் அல்லது ஹைப்ரிட் 1.5L உடன் வருகிறது. அர்பன் க்ரூஸர் AWD மாறுபாட்டின் விருப்பத்தையும் பெற்று, மிகவும் திறமையானது கருதப்படுகிறது. அர்பன் க்ரூஸரின் ஆரம்ப விலை ரூ.11.14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement