Automobile News: இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கார் உற்பத்தி தொழிற்சாலைகளின், டாப் 5 லிஸ்ட் கீழே வழங்கப்பட்டுள்ளன.


இந்தியாவில் கார் உற்பத்தி தொழிற்சாலை:


இந்திய ஆட்டோமொபைல் சந்தை விற்பனையில் மட்டுமின்றி, உற்பத்தியிலும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போதைய சூழலில் உலக அளவில் மூன்றாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக இந்தியா திகழ்கிறது. பல சொகுசு கார்கள் வெளிநாடுகளில் இருந்து முழுமையாக கட்டமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால், வெகுஜனங்களால் அதிகம் பயன்படுத்தப்படும் கார் மாடல்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்காக உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி, பல முன்னண் வெளிநாட்டு நிறுவனங்களும் பெரும் முதலீட்டுடன் இந்தியாவிலேயே உற்பத்தி ஆலையை அமைத்துள்ளன. அந்த வகையில் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கார் உற்பத்தி தொழிற்சாலைகளின், டாப் 5 லிஸ்ட் கீழே வழங்கப்பட்டுள்ளன.


5. மஹிந்திரா உற்பத்தி ஆலை, சக்கன்:


மகாராஷ்டிராவின் சக்கனில் மஹிந்திரா நிறுவனத்தின் உற்பத்தி ஆலை, கடந்த 2010ம் ஆண்டில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் நிறுவப்பட்டது. இது 700 ஏக்கர் பரப்பளவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்ஜின்கள், பயணிகள் வாகனங்கள் மற்றும் டிரக்குகள் கூட இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஆலை ஒரு வருடத்தில் 3 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. இங்கு 5000-க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்.


4. ரெனால்ட்-நிசான் ஆலை, சென்னை:


சென்னையில் உள்ள ரெனால்ட்-நிசான் ஆலை 4500 கோடி ரூபாய் செலவில், கடந்த 2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.  650 ஏக்கரில் பரந்து விரிந்து அமைந்துள்ள இந்த ஆலை, ஒரு வருடத்தில் 4.8 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இங்கு 8000-க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.


3: ஹூண்டாய் ஆலை, சென்னை


ஹூண்டாய் குறைந்த காலகட்டத்திலேயே இந்தியாவின் முன்னணி உற்பத்தியாளர்களில் ஒன்றாக மாறியுள்ளத. சென்னையில் 535 ஏக்கர் பரப்பளவில் ஒரு பெரிய உற்பத்தி வசதியைக் கொண்டுள்ளது. அது இரண்டு ஆலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் தமிழ்நாட்டின் மிகப்பெரிய முதலீட்டாளராக இருந்து வருகிறது, இந்த ஆலை $1.5 பில்லியன் செலவில் கட்டப்பட்டது, அது முடிந்த நேரத்தில் $2.7 பில்லியனாக உயர்த்தப்பட்டது. இது ஒரு வருடத்தில் 6.8 லட்சம் கார்களை உருவாக்கும் திறன் கொண்டுள்ளது.


2: டாடா மோட்டார்ஸ் சனந்த் ஆலை, குஜராத்


குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் முன்பு இருந்த ஃபோர்டு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை, தற்போது டாடா நிறுவனத்தால் கைப்பற்றப்பட்டுள்ளது. அது மேலும் விரிவாக்கப்பட்டு, 1100 ஏக்கர் பரப்பளவில் ஃபோர்டு ஆலையுடன் இணைந்து, ஒரு வருடத்தில் 7.2 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறனை, டாடா உற்பத்தி ஆலை கொண்டுள்ளது.


1: மாருதி சுசுகி மனேசர் ஆலை, ஹரியானா


ஹரியானா மாநிலம் மானேசரில் உள்ள மாருதி சுசுகி ஆலையானது 2007 ஆம் ஆண்டு உற்பத்தியைத் தொடங்கிய இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தித் தொழிற்சாலையாகும். இந்த தொழிற்சாலை 600 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.  100% திறனுடன் எந்த நேரத்திலும் 20 மாடல்களை உற்பத்தி செய்யக்கூடியது. இந்த ஆலை ஒரு வருடத்தில் 8.8 லட்சம் கார்களை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது. 


உற்பத்தி திறன் அடிப்படையில் இந்த தொழிற்சாலைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


Car loan Information:

Calculate Car Loan EMI