KTM Bikes: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும் கேடிஎம் நிறுவனத்தின், டாப் 5 பைக்குகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
கேடிஎம் 200 டியூக்
கேடிஎம் 200 டியூக் என்பது பத்தாண்டுகளுக்கு முன்பு இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரிஜினல் கேடிஎம் பைக் ஆகும். பல பிரிவுகளுக்கான முதன்மையான அம்சங்களயும் மற்றும் சிறந்த செயல்திறன் காரணமாக இது ஆர்வலர்கள் மத்தியில் உடனடி வெற்றி பெற்றது. தற்போது 24.67 bhp மற்றும் 19.3 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 199.5cc BS6 இன்ஜினைக் கொண்டுள்ளது. 159 கிலோ எடை கொண்ட இந்த மாடல் 13.4 லிட்டர் எரிபொருள் டேங்க் கொள்ளளவு கொண்டது. இதன் விலை சென்னையில் ரூ.2.05 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கேடிஎம் 390 டியூக்
கேடிஎம் 390 டியூக் ஆனது இந்திய சந்தைக்கான அடுத்த பெரிய அப்டேட்டட் வாகனமாகும். இது சிறிய 200 சிசி எடிஷனிற்கு எதிராக செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வழங்கியது. மேலும், இது கூடுதல் சிறப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டிருந்தது. தற்போது, டியூக் வாகனமானது 45.3 bhp மற்றும் 39 Nm டார்க்கை வழங்கும் 398.63cc BS6 இன்ஜினைப் பெறுகிறது. 168.3 கிலோ எடை கொண்ட இந்த மாடல் 15 லிட்டர் எரிபொருள் டேங்க் கொள்ளளவு கொண்டது. இதன் விலை சென்னையில் ரூ.3.32 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கேடிஎம் ஆர்சி 390
கேடிஎம் ஆர்சி 390, பட்ஜெட்டில் இந்திய சந்தைக்கு மோட்டோ 3-ஆல் கவரப்பட்ட செயல்திறனை வழங்கியது. கூர்மையான வெளிப்புறங்கள், குறைந்த எடை மற்றும் பிரிவில் சிறந்த கையாளுதல் ஆகியவற்றுடன், RC390 இந்தியாவில் அறியப்பட்ட பெயராகவும் மாறியது. தற்போது இது 42.9 பிஎச்பி மற்றும் 37 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் 373.27சிசி பிஎஸ்6 இன்ஜினை கொண்டுள்ளது. இந்த பைக்கின் எடை 172 கிலோ மற்றும் 13.7 லிட்டர் எரிபொருள் டேங்க் கொள்ளளவு கொண்டது. இது இரண்டு வகைகள் மற்றும் மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை சென்னையில் ரூ.3.05 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கேடிஎம் 390 அட்வென்ச்சர்
இந்தியாவில் வளர்ந்து வரும் அட்வென்ச்சர் (ADV) பிரிவில், 390 அட்வென்ச்சரை சரியான நேரத்தில் அறிமுகப்படுத்துவதில் KTM நிறுவனம் புத்திசாலித்தனமாக இருந்தது. 390 அட்வென்ச்சர் இந்த பிரிவில் மிகவும் திறமையான சலுகையாக மாறியது. ஆனால் அது மிகவும் மலிவு விலையில் கிடைக்கவில்லை. இது 42.9 பிஎச்பி மற்றும் 37 என்எம் டார்க்கை வழங்கும் 373.27சிசி பிஎஸ்6 இன்ஜினைப் பெறுகிறது. 177 கிலோ எடை கொண்ட இந்த மாடலில் 14.5 லிட்டர் எரிபொருள் டேங்க் உள்ளது. இது நீண்ட பயணத்திற்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை சென்னையில் ரூ.3.43 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கேடிஎம் 250 அட்வென்ச்சர்
பட்ஜெட் எண்ணங்களை கொண்ட வாடிக்கையாளர்களை கவரும் வகையில், KTM நிறுவனம் 250 ADV வடிவில் சிறிய எடிஷனை அறிமுகப்படுத்தியது. KTM 250 அட்வென்ச்சர் ஆனது 29.63 bhp மற்றும் 24 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 248.76cc BS6 இன்ஜினை கொண்டுள்ளது. 177 கிலோ எடை கொண்ட இந்த மாடல் 14.5 லிட்டர் எரிபொருள் டேங்க் கொள்ளளவு கொண்டது. இது இரண்டு வகைகள் மற்றும் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை சென்னையில் ரூ.2.89 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI