Budget CNG Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ரூ.7 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கு, டாப் 5 சிஎன்ஜி கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


மாருதி சுசூகி வேகன் ஆர்:


மாருதி சுசூகி வேகன் ஆர் காரின் ஆரம்ப விலை ரூ.5.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இரண்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளை வழங்குகிறது. அவை 67 PS & 89 Nm கொண்ட 1-லிட்டர் இன்ஜின் மற்றும் 90 PS & 113 Nm உடன் 1.2-லிட்டர் இன்ஜின் ஆகும்.  இவை இரண்டும் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும். மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 57 PS மற்றும் 82 Nm வழங்கும் CNG விருப்பமும் உள்ளது. இது ஒரு கிலோவிற்கு 34 கிமீ மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. 


டாடா டியாகோ:


டாடா டியாகோ கார் மாடலின் விலை ரூ. 5.64 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இதில் 85 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது. CNG மாறுபாடு 72 bhp மற்றும் 95 Nm வழங்குகிறது, மேலும் இது 5-ஸ்பீடு மேனுவலுடன் மட்டுமே கிடைக்கிறது. அனைத்து எடிஷன்களும் சமீபத்திய உமிழ்வு விதிமுறைகளை பூர்த்தி செய்கின்றன. டியாகோ சிஎன்ஜி எடிஷன் கிலோவிற்கு 26.49 கிமீ மைலேஜ் வழங்குகிறது.


மாருதி சுசூகி செலிரியோ:


மாருதி சுசூகி செலிரியோ மாடல் விலை ரூ. 5.36 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இதில் 67 PS மற்றும் 89 Nm உடன் 1-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 5-ஸ்பீடு மேனுவலுடன் மட்டுமே கிடைக்கும் CNG மாறுபாடு, 57 PS மற்றும் 82 Nm ஐ உற்பத்தி செய்கிறது மற்றும் 60 லிட்டர் CNG டேங்குடன் வருகிறது. ஒரு கிலோவிற்கு 34.43 கிமீ மைலேஜ் வழங்குகிறது.


மாருதி சுசூகி ஆல்டோ கே10:


Maruti Suzuki Alto K10 மாடலின் விலையானது ரூ.3.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. இதில் 66 bhp மற்றும் 89 Nm டார்க் ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய,  1.0-லிட்டர், மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் வருகிறது. இது ஒரு கிலோவிற்கு 33.85 கிமீ மைலேஜ் வழங்குகிறது.


மாருதி சுசூகி எஸ்-பிரஸ்ஸோ:


Maruti Suzuki S-Presso மாடலின் விலை ரூ. 4.26 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இதில் இடம்பெற்றுள்ள 1.0 லிட்டர் K10C பெட்ரோல் இன்ஜின் ஆனது 66 bhp மற்றும் 89 Nm டார்க் ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இந்த எஞ்சின் சிஎன்ஜி கிட் உடன் கிடைக்கிறது. அது 66 பிஹெச்பி மற்றும் 82.1 என்எம் ஆற்றலை வெளிப்படுத்தும். 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்க் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன. இது ஒரு கிலோவிற்கு 32.73 கிமீ மைலேஜ் வழங்குகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI