உலகின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று டொயோட்டா. டொயோட்டா நிறுவனம் இந்திய வாகன சந்தையில் மிகவும் முக்கியமான இடத்தை தக்க வைத்துள்ளது. சாமானியர்களுக்கான வாகனங்களை உற்பத்தி செய்யும் அதே நேரத்தில், ஆடம்பர சொகுசு கார்களில் உற்பத்தியிலும் டொயோட்டாா முன்னணியில் உள்ளது.
அந்த வகையில், டொயோட்டோ தற்போது அறிமுகப்படுத்தியுள்ள சொகுசு கார் லெக்சஸ் எல்.எம்350 எச் கார் ஆகும். இந்தியாவின் புகழ்பெற்ற பிரபலங்கள் இந்த கார்களை வாங்கி வருவது அனைவரது மத்தியிலும் இந்த காரின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் லெக்சஸ் எல். எம்350 எச் காரை தங்கள் வசம் வைத்துள்ள பிரபலங்கள் யார்? யார்? என்று கீழே காணலாம்.
ரன்பீர் கபூர் - ஆலியாபட்:
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்தான் இந்த காரை முதன் முதலில் வாங்கிய பாலிவுட் நடிகர் ஆவார். இவர் வாங்கியதும் இவரது மனைவி ஆலியா பட்டும் இந்த காரை வாங்கினார். லெக்சஸ் எல்.எம்.350எச் காரை வாங்கிய முதல் பாலிவுட் ஜோடியும் இவர்களே ஆவார்கள்.
ஆனந்த் அம்பானி:
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரும், இந்தியாவின் புகழ்பெற்ற கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி இந்த காரை வாங்கியுள்ளார்.
ஹர்திக் பாண்ட்யா:
இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஹர்திக் பாண்ட்யா இந்த காரை வாங்கியுள்ளார். லெக்சஸ் எல்.எம்.350எச் காரை வாங்கிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் இவரே ஆவார்.
ஜான்வி கபூர்:
தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இந்த காரை வாங்கியுள்ளார். ஜான்வி கபூர் வாங்கியுள்ள காரில் சில சிறப்பு அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்:
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் சமீபத்தில் வாங்கியுள்ள புதிய கார் இந்த லெக்சஸ் எல்.எம்.350எச் ஆகும். இவர் தனது ரோல்ஸ்ராய்ஸ் காரை விற்றுவிட்டு இந்த புதிய காரை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்ப்பதற்கு மினி வேன் போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த காரில் ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளது. வழக்கமான எம்.பி.விக்களை விட அதிக இடவசதியுடன், நீளமாகவும், அகலமாகவும் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கார் 2 வேரியண்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் அமரும் வகையிலான லெக்சஸ் காரும், 7 பேர் அமரும் வகையிலான லெக்சஸ் காரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் பெரும்பாலும் 4 பேர் பயணிக்கும் வகையிலான வேரியண்டையே விரும்புகின்றர்.
ஏனென்றால், 4 பேர் பயணிக்கும் வகையிலான வேரியண்டில் பின் இருக்கைக்கும் முன் இருக்கைக்கும் நடுவில் தடுப்பு போல இருக்கும். அதில் ஒரு பெரிய திரை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்பக்க இருக்கையில் மசாஜர் முதல் ஹீட்டர் வரை அனைத்து வசதிகளும் உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI