கேடிஎம் பைக்குகள்:
இருசக்கர வாகன ஓட்டிகளிடையே அதிக கவனம் ஈர்த்த மாடல்களில் கேடிஎம் நிறுவனத்தை சேர்ந்த வாகனமும் ஒன்று. அதில் இடம்பெற்றுள்ள ஸ்போர்ட்ஸ் லுக், இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் காரணமாகவே, இந்திய இருசக்கர வாகன விற்பனை சந்தையில், கேடிஎம் நிறுவனம் கணிசமான பங்கு வகித்து வருகிறது.
இந்நிலையில், கூடுதல் பயனாளர்களை கவரும் விதமாக விரைவில், கேடிஎம் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி விற்பனைக்கு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு சான்றாக, கேடிஎம் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை உருவாக்கி வருவதாக, ஏற்கனவே நீண்ட காலமாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. பல முன்னணி நிறுவனங்களின் ஸ்கூட்டர்களுக்கு, புதிய கேடிஎம் ஸ்கூட்டர் நேரடி போட்டியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இ-ஸ்கூட்டர் மாடல்
முன்னதாக 2013 டோக்கியோ ஆட்டோ விழாவில் கேடிஎம் நிறுவனம் இ-ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிரெலிஸ் ஃபிரேம், கச்சிதமான டிசைன் மற்றும் ஆரஞ்சு நிறம் கொண்டிருந்த ஸ்கூட்டர், தோற்றத்தில் கேடிஎம் ஸ்டைலிங் சார்ந்து இருந்தது. எனினும், இது கான்செப்ட் வடிவிலேயே இருந்தது. இதனால் விரைவில் கேடிஎம் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
கேடிஎம் ஸ்கூட்டருக்கு வாய்ப்பு இல்லை:
இந்நிலையில் தான், கேடிஎம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் தற்போதைக்கு அறிமுகம் செய்யப்படாது என கிஸ்கா டிசைனை சேர்ந்த ஜெரால்டு கிஸ்கா விளக்கமளித்துள்ளார். தற்போதைய சூழலில், பெர்ஃபார்மன்ஸ் ரக மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்வதில் கேடிஎம் பிரபலமாக உள்ளது. இந்த நிலையில், ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்யும் பட்சத்தில், கேடிஎம் நிறுவனத்தின் அடையாளம் பாதிக்கப்படும் என ஜெரால்டு கிஸ்கா தெரிவித்து உள்ளார். இதனால் பயனாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கேடிஎம் நிறுவனத்தின் புது வரவுகள்:
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் தற்போது நடைபெறாது என்ற பட்சத்தில் கேடிஎம் நிறுவனம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இவை ஃபிரீரைடு E-XC மற்றும் SX E 5 மற்றும் SX-E 3 மாடல்கள் எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. எதிர்காலத்தில் கேடிஎம் நிறுவனம் E-டியூக் மாடலை அறிமுகம் செய்யும் திட்டத்தில் இருக்கிறது. எனினும், இதன் வெளியீடு பற்றி கேடிஎம் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
இந்தியர்களை ஏமாற்றும் கேடிஎம் நிறுவனம்:
கேடிஎம் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் தனது 890 அட்வென்ச்சர் R மோட்டர்சைக்கிளை மேம்படுத்தியது. அதைதொடர்ந்து 2023ம் ஆண்டிற்கான புதிய வெர்ஷன் 890 அட்வென்ச்சர் மாடல் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதைய சூழலில் ஐரோப்பாவில் மட்டுமே 2023 கேடிஎம் 890 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய பைக்கை தற்போதைக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை என, கேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதோடு, கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகமான 2023 சூப்பர் அட்வென்ச்சர் எஸ் மோட்டார்சைக்கிளும் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI