இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மின்சார இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஓலா, ஏதர் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக பல நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றனர்.

Continues below advertisement

Kinetic Green Flex:

சந்தையில் விற்பனையாகி வரும் Kinetic நிறுவனத்தின் Kinetic Green Flex இ ஸ்கூட்டரின் விலை, தரம் மற்றும் மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்த Kinetic Green Flex இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 16 ஆயிரத்து 489 ஆகும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தாலே 120 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 72 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதை ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 4 மணி நேரம் ஆகிறது. இருக்கை உயரம் 485 மி.மீட்டர் உயரம் கொண்டது.

Continues below advertisement

லித்தியம் அயர்ன் பேட்டரி:

இந்த இ ஸ்கூட்டர் கருப்பு, சிவப்பு, நீலம், சாம்பல் மற்றும் வெள்ளை வண்ணங்களில் உள்ளது. 160 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. நார்மல், எகோ மற்றும் பவர் மோட்களில் உள்ளது. பிஎல்டிசி மோட்டார் ஆகும். நிரந்தர பேட்டரியாக பொருத்தப்பட்டுள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

ஐபி 67 பேட்டரி ஐபி ரேட்டிங் பொருத்தப்பட்டுள்ளது. போர்ட்டபிள் சார்ஜர் டைப் ஆகும். 72 வாட் 10 ஏஎச் அவுட்புட் ஆகும். சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. முன்பக்கம், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம், பின்பக்கம் 12 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன், டூயல் ஷாக் அப்சார்பர் பின்பக்க சஸ்பென்சன் வசதி உள்ளது. 100 கிலோ எடை கொண்டது. 190 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் வசதி உள்ளது. 150 கிலோ எடை தாங்கும் திறன் கொண்டது. பேட்டரி வாரண்டி 3 வருடம் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர் அளிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாரண்டி 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டரில் எது முதலில் வருகிறதோ அதற்கு அளிக்கப்படுகிறது.

டிஜிட்டல் டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. 1 ட்ரிப்மீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ஆன்டி தெஃப்ட் சிஸ்டம் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.  பகலில் எரியும் விளக்குள் ஆகும். ஹாலோஜன் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பில்லியன் சீட் இருக்கை பொருத்தப்பட்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI