Kia Syros: வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள பாரத் மொபிலிட்டி ஷோவில், கியா நிறுவனத்தின் சிரோஸ் முதல் முறையாக பொதுமக்களுக்குக் காண்பிக்கப்படும்.
கியா சிரோஸ் கார் மாடல்:
கியா நிறுவனம் தனது தரமான செயல்திறன் மற்றும் ஈர்கக் கூடிய வடிவமைப்பு கொண்ட எஸ்யுவி கார்கள் மூலம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையிலும் வாடிக்கையாளர்கள ஈர்த்து வருகிறது. இந்நிலையில் தான் சோனெட் கார் மாடலை தொடர்ந்து, தனது சிறிய எஸ்யுவி மாடலான சிரோஸ் காரை, வரும் 19ம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதைதொடர்ந்து வரும் ஜனவரி மாதம் Syros விற்பனைக்கு வரும். டீஸர்கள் மூலம் சில வடிவமைப்பு விவரங்கள் மற்றும் அம்சங்களை முன்னோட்டமிட்டு, பிராண்ட் சில வாரங்களாக இது பற்றிய கவனத்தை அதிகரித்து வருகிறது. நிறுவனத்தின் போர்ட்ஃபோல்யோவில் செல்டோஸ் மற்றும் சோனட்டிற்கு இடையே, நிலைநிறுத்தப்படும் என கூறப்படுகிறது.
தனித்துவமான கியா சிரோஸ் காம்பாக்ட் எஸ்யூவி:
கியா இந்தியா, நெரிசலான காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் சிரோஸை ஒரு தனித்துவமான தயாரிப்பாக நிலைநிறுத்த முயற்சிக்கிறது. அதிகபட்ச கேபின் இடத்தை விடுவிக்கும் வகையில், தட்டையான கூரை மற்றும் நிமிர்ந்த பின்புறத்துடன் கூடிய பாக்ஸி வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
சிரோஸில் உள்ள சில ஸ்டைலிங் குறிப்புகள், ஃபிளாக்ஷிப் EV9 SUV மற்றும் கார்னிவல் MPV போன்ற மற்ற கியா மாடல்களை நமக்கு நினைவூட்டுகின்றன . ஒரு தனித்துவமான அம்சம், பின்புற கால் (quarter) கண்ணாடி பகுதிக்கு ஒரு கூர்மையான கிங்க் கொண்ட சாளரக் கோடு. பி-பில்லரில் உள்ள ஜன்னல் கோட்டின் உடைப்பு, உடல் நிறத்தில் முடிக்கப்பட்டுள்ளது. இது பழைய ஸ்கோடா எட்டியை நினைவூட்டுகிறது.
வடிவமைப்பு விவரங்கள்:
சிரோஸ் ஐந்து இருக்கைகள் கொண்ட உட்புற அமைப்புடன் வரும். மேலும் அது பெரிய இடமாக இருக்கும். வரிசைகள் மற்றும் சரக்கு பகுதி என இரண்டும் அடங்கும். பனோரமிக் சன்ரூஃப், ADAS மற்றும் இந்த பிரிவில் உள்ள மற்ற போட்டியாளர்களின் இடம்பெறக்கூடிய அனைத்து அம்சங்கள் போன்ற உபகரணங்களையும் இதில் எதிர்பார்க்கலாம். கியா முதலில் பெட்ரோல் இன்ஜினுடன் சிரோஸை அறிமுகப்படுத்தும். இதன் மின்சார எடிஷன் அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் வரிசையில் சேரும்.
சிரோஸ் அதன் அளவு மற்றும் விலைப் புள்ளியில் அதன் போட்டியைக் கொண்டுள்ளது. இது அடுத்த வாரம் விற்பனைக்கு வரும் ஸ்கோடா கைலாக்கிலிருந்து போட்டியைக் காணும் .மேலும் ஹுண்டாயின் வென்யூ , டாடாவின் நெக்ஸான், மஹிந்திராவின் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ மற்றும் மாருதியின் பிரெஸ்ஸா போன்ற மற்ற சிறிய எஸ்யூவிகளுடனும் சந்தையில் போட்டியிடும்.
ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெறவிருக்கும் பாரத் மொபிலிட்டி ஷோவில் கியா சிரோஸ் முதல் முறையாக பொது மக்களுக்குக் காண்பிக்கப்பட உள்ளது. அப்போது விலை தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI