இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today November 30, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
வியாபார பணிகளில் அலைச்சல் உண்டாகும். மறைமுகமான விமர்சனங்களும் எதிர்ப்புகளும் தோன்றி மறையும். மற்றவர்களை எதிர்பார்க்காமல் நீங்களே பணிகளைச் செய்வது நல்லது. சில விஷயங்களுக்கு பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பழைய நினைவுகள் மூலம் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். மனதில் இருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்தாமல் இருக்கவும். சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.
ரிஷப ராசி
கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சகோதர வகையில் ஒத்துழைப்பு ஏற்படும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கித் தெளிவு பிறக்கும். கூட்டாளிகளின் ஆதரவுகள் மூலம் முதலீடுகள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். நட்பு மேம்படும் நாள்.
மிதுன ராசி
உணவு முறையில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் புதுமையான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களிடமிருந்து வந்த வேறுபாடுகள் குறையும். சில நேரங்களில் மறதி பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். திருப்பங்கள் நிறைந்த சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வும் மந்த தன்மையும் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.
கடக ராசி
மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும். அக்கம், பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் கல்வி சார்ந்து யோசிப்பீர்கள். சமூகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக மாற்ற முயற்சிகள் கைகூடும். சாந்தம் நிறைந்த நாள்.
சிம்ம ராசி
தாய் வழி உறவுகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாகனப் பழுதுகளைச் சீர் செய்வீர்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் திருப்தி உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். ஆரோக்கிய சிந்தனைகள் மேம்படும். பங்குதாரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கவனம் வேண்டிய நாள்.
கன்னி ராசி
மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு கற்றல் திறனில் புதுவிதமான சூழல் காணப்படும். நீண்ட நாள் ஆசைகளும் எண்ணங்களும் நிறைவேறும். சட்ட நுணுக்கங்களைப் புரிந்து கொள்வீர்கள். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.
துலாம் ராசி
ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்வாதங்களில் சிந்தித்துச் செயல்படவும். நண்பர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். கடன் செயல்களில் தெளிவுகள் உண்டாகும். தூக்கமின்மை பிரச்சனைகள் குறையும். புதிய உணவுகளில் கவனம் வேண்டும். உதவி கிடைக்கும் நாள்.
விருச்சிக ராசி
குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தன வரவுகள் மூலம் சேமிப்பு மேம்படும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். வித்தியாசமான கற்பனைகள் மூலம் குழப்பமான சூழல் ஏற்படும். வர்த்தக செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவுகள் பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.
தனுசு ராசி
குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பயணம் மூலம் சில மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வேலையில் இருந்துவந்த தடைகள் நீங்கும். வெற்றி கிடைக்கும் நாள்.
மகர ராசி
திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஒப்பந்தப் பணிகள் சாதகமாக நிறைவு பெறும். திறமைகள் வெளிப்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். மாறுபட்ட சிந்தனைகள் மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். யோகம் நிறைந்த நாள்.
கும்ப ராசி
வியாபார பணியில் லாபங்கள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். பயணம் மூலம் சில மாற்றமான வாய்ப்புகள் உருவாகும். எதிலும் திருப்தியற்ற மனநிலை ஏற்பட்டு நீங்கும். சமூகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். செலவு நிறைந்த நாள்.
மீன ராசி
ஆன்மிக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். ஆராய்ச்சிப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். துணைவருடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பழக்கவழக்க விஷயங்களில் சிறுசிறு மாற்றங்கள் காணப்படும். போட்டி நிறைந்த நாள்.