இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக உருவாகி வரும் நிறுவனம் கியா நிறுவனம். இவர்களின் படைப்புகளில் மிகவும் முக்கியமான Kia Sonet ஆகும். இந்த காரின் தரம், விலை, மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

Continues below advertisement

விலை என்ன?

Kia Sonet கார் ஒரு எஸ்யூவி ரக கார் ஆகும். லெவல் 1 ADAS வசதி, கிளட்ச் இல்லாமல் மேனுவல் கியர் மாற்றம், சன்ரூஃப் என பல்வேறு வசதிகளை கொண்டது இந்த கார். இந்த கார் 1 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின், 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்ஜின், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் ஆகிய வேரியண்ட்களில் இந்த கார் உள்ளது. 

இந்த காரில் மொத்தம் 23 வேரியண்ட்கள் உள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 8.70 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் 16.81 லட்சம் ஆகும். 

Continues below advertisement

வேரியண்ட்கள்:

1. HTE:

ஒரு வேரியண்ட் மட்டுமே கொண்ட இந்த கார் ரூபாய் 8.70 லட்சம் ஆகும். 

2. HTE (O):

இந்த மாடலில் 2 வேரியண்ட் உள்ளது. இது ரூபாய் 9.16 லட்சம் மற்றும் ரூபாய் 10.65 லட்சத்தில் விற்கப்படுகிறது. 

3. HTK:

இந்த மாடலிலும் 2 வேரியண்ட் கார் உள்ளது. இதன் விலை ரூபாய் 9.98 லட்சம் மற்றும் ரூபாய் 10.36 லட்சம் ஆகும். 

4. HTK (O)

இந்த மாடலில் 3 வேரியண்ட் உள்ளது. ரூபாய் 10.36 லட்சமும், ரூ.10.72 லட்சமும், ரூபாய் 11.75 லட்சத்திலும் உள்ளது. 

5. HTK Plus:

இந்த காரில் 3 வேரியண்ட் உள்ளது. ரூபாய் 10.78 லட்சமும், ரூ.11.14 லட்சமும், ரூ.12.79 லட்சமும் வேரியண்டிற்கு ஏற்ப விற்பனை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

6. HTK Plus (O):

இந்த காரில் 3 வேரியண்ட் உள்ளது. 11.35 லட்சம் ரூபாய், 12.42 லட்சம் ரூபாய். 13.38 லட்சம் ரூபாய் விற்பனை விலையாகும். 

7. HTX:

இந்த காரில் 4 வேரியண்ட் உள்ளது. ரூபாய் 13.34 லட்சம், ரூபாய் 13.94 லட்சம், ரூபாய் 14.30 லட்சம்,  ரூபாய் 14.89 லட்சம் இதன் விற்பனை விலையாகும். 

8.GTX Plus:

இந்த மாடலில் மொத்தம் 4 வேரியண்ட் உள்ளது. இதன் விலை ரூ.16.63 லட்சம், ரூ.16.74 லட்சம், ரூ.17.31 லட்சம் மற்றும் ரூ. 17.42 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

9. X Line:

இந்த காரில் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ளது. டாப் வேரியண்டான இந்த ரூ.16.81 லட்சம் ஆகும். 

மைலேஜ்:

இந்த Kia Sonet காரில் எகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் மோட் உள்ளது. 118 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 6 கியர்கள் மற்றும் 7 கியர்களில் இந்த கார் உள்ளது. 19.2 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 

998 சிசி திறன் கொண்ட எஞ்ஜின், 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பெட்ரோல் கார்களில் அதன் வேரியண்டிற்கு ஏற்ப பொருத்தப்பட்டுள்ளது. டீசல் காரில் 1493 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆட்டோமெட்டிக் வேரியண்டும் இந்த Kia Sonet கார்களில் உள்ளது.

சிறப்புகள்:

எல்இடி  முகப்பு விளக்குகள், பனியிலும் தெளிவாக தெரியும் எல்இடி விளக்குகள், 16 இன்ச் கிரிஸ்டல் கட் சக்கரங்கள், 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், முன்பக்கம் மற்றும் பார்க்கிங் சென்சார் கார், டிஸ்க் ப்ரேக், ப்ளைண்ட் வியூ மானிட்டர் இந்த காரில் உள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI