Kia Sonet 2024: கியா சோனெட்டின் 2024 மாடலுக்கான விலை 8 லட்சம் முதல் 15 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Kia Sonet 2024:
கியா நிறுவனத்தின் சோனெட் கார் மாடலின் ஃபேஸ்லிப்ட் மாடல் அண்மையில் தான் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2024ம் ஆண்டிற்கான இந்த மாடலில் இன்ஜின், டிரான்ஸ்மிஷன் மற்றும் டிரிம்களின் அடிப்படையில் மொத்தம் 19 வேரியண்ட்களில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்நிலையில் தான், 2024 கியா சோனெட்டிற்கான முன்பதிவு வரும் 20ம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவர் மாதம் இந்த காரின் விற்பனை தொடங்கும் போது இதன் விலை 8 லட்சத்தில் தொடங்கி 15 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்ஸான், மாருதி சுசுகி பிரேஸ்ஸா, ஹுண்டாய் வென்யூ மற்றும் மஹிந்திரா XUV300 ஆகியவை, கியா சோனெட் ஃபேஸ்லிப்ட் மாடலுக்கு இந்திய சந்தையில் போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
இன்ஜின் ஆப்ஷன்கள்:
ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் 3 இன்ஜின்கள் தான், கியா சோனெட்டின் 2024ம் ஆண்டு ஃபேஸ்லிப்ட் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 83PS/115Nm ஆற்றலை வெளிப்படுத்தும் ஸ்மார்ட்ஸ்ட்ரீம் G1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 120PS/172Nm ஆற்றலை வெளிப்படுத்தும் G1.0 லிட்டர் T-Gdi பெட்ரோல் இன்ஜின் மற்றும் 116PS/250Nm ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் CRDi VGT diesel இன்ஜின் ஆகிய ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள்:
இன்ஜின்களை போன்று டிரான்ஸ்மிஷனிலும் பல்வேறு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, 5 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன், 6 ஸ்பீட் இன்டக்ரேடட் மேனுவல் டிரான்ஸ்மிஷன், 7 ஸ்பீட் DC டிரான்ஸ்மிஷன், 6 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன், 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட ஆப்ஷன்களும் பயனாளர்களுக்காக தாரளமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
19 வேரியண்ட்கள்:
கியா சோனெட்டின் 2024 ஆண்டு மாடலானது HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX+ மற்றும் X-Line ஆகிய 7 டிரிம்களில் கிடைக்கிறது. அவற்றில் இருந்து மொத்தமாக 19 வேரியண்ட்களாக கியா சோனெட் 2024 கார் விற்பனை செய்யப்படுகிறது.
1.2 petrol 5MT HTE
1.2 petrol 5MT HTK
1.2 petrol 5MT HTK+
1.0 turbo petrol 6iMT HTK+
1.0 turbo petrol 6iMT HTX
1.0 turbo petrol 6iMT HTX+
1.0 turbo petrol 7DCT HTX
1.0 turbo petrol 7DCT GTX+
1.0 turbo petrol 7DCT X-Line
1.5 diesel 6MT HTE
1.5 diesel 6MT HTK
1.5 diesel 6MT HTK+
1.5 diesel 6MT HTX
1.5 diesel 6MT HTX+
1.5 diesel 6iMT HTX
1.5 diesel 6iMT HTX+
1.5 diesel 6AT HTX
1.5 diesel 6AT GTX+
1.5 diesel 6AT X-Line
Car loan Information:
Calculate Car Loan EMI