கியா செல்டோஸ் எக்ஸ் லைன் (Kia Seltos X Line) இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவிருக்கிறது. இதன் விலை ரூ.15 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் டிசைன் மற்றும் சிறப்பம்சங்களை அறிவோம்.


ஆட்டோமொபைல் உற்பத்தித் துறையில் தனக்கென தனியிடம் பிடித்து வைத்துள்ள கியா இந்திய சந்தையில் மிகக் குறைந்த காலத்திலேயே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
தற்போது, கியா தனது டாப் எண்ட் வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது செல்டாஸ் எக்ஸ் லைன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தி எக்ஸ் லைன் டார்க் தீம் வேரியன்ட் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.





மாற்றங்கள் என்ன?


கியா செல்டஸ் எக்ஸ் லைனில் பல்வேறு புதிய அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் ஆரஞ்சு நிறத்தில் ஹெட்லைட்டைச் சுற்றி ஒரு பட்டையும் பளபளப்பான கறுப்பு நிறத்தில் ஓர் இன்ஸர்ட் இருக்கிறது. ஆரஞ்சு கிரில் மிகவும் மிடுக்கான தோற்றம் தருகிறது. 18 அங்குல கிறிஸ்டல் கட் மேட் ஃபினிஷ் க்ராஃபைட் அலாய் வீல்கள் உள்ளன.


வடிவம் மற்றும் சிறப்பம்சம்:


கியா செல்டாஸ் எக்ஸ் லைன் அனைத்து சீரிஸிலும் பளபளப்பான கருப்பு நிற கிரில் பொருத்தப்பட்டுள்ளது. முன்னால் இருக்கும் பம்பர் அகற்றப்பட்டு தோற்றம் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஸ்யுவியில் 10.25 அங்குல தொடுதிரை டிஸ்ப்ளே உள்ளது. Apple CarPlay, Android Auto மற்றும்  UVO இணைக்கப்பட்ட கார் சவுண்ட் சிஸ்டம் ஆகியன இருக்கின்றன. இத்துடன் க்ளைமேட் கன்ட்ரோல், சன்ரூஃப், காற்று சுத்திகரிப்பு வசதி, போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியன இடம்பெற்றுள்ளன.




இன்ஜின் திறன் என்ன?


கியா செல்டாஸ் எக்ஸ் லைனின் இன்ஜின் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரால் ஆனது. 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வேரியன்ட்டும் கிடைக்கிறது. 1.4 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் இன்ஜின்  138bhp திறன் கொண்டது. அதன் டார்க் 250Nm என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதே 1.5 லிட்டர் CRDi டீசல் இன்ஜின் 113bhp திறனுடன் 250Nm டார்க் வேல்யூ கொண்டது.


சந்தைப் போட்டியாளர் யார்?


கியா செல்டாஸ் எக்ஸ் லைனின் சந்தை போட்டியாளர் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யுவி தான். க்ரெட்டா தான் இதுவரை எஸ்யுவி சந்தையில் சிறந்த வாகனமாக இருக்கிறது. க்ரெட்டாவுடன் கியா செல்டாஸ் எக்ஸ் லைனின் தாக்குப்பிடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Car loan Information:

Calculate Car Loan EMI