Kia Carens Clavis EV Baas: கியா நிறுவனம் தனது காரென்ஸ் க்ளாவிஸ் மின்சார கார் மாடலுக்கு, பேட்டரியை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தும் Baas நடைமுறையை புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

Continues below advertisement

கியா காரென்ஸ் க்ளாவிஸ் - புதிய சலுகை

இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட தனது முதல் மின்சார கார் மாடலான காரென்ஸ் க்ளாவிஸிற்கு, பேட்டரியை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தும் Baas நடைமுறையை கியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. உள்ளூர் சந்தையில் மின்சார கார் பயன்பாட்டை வேகமெடுக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அதிக நிதி சலுகைகளை வழங்குவதன் மூலம், மின்சார வாகன கொள்முதலை ளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. காரென்ஸ் க்ளாவிஸ் மின்சார கார் மாடலுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதை வியாபாரத்தை மேம்படுத்த பயன்படுத்திக் கொள்ளும் வகையில், இரண்டு எளிய கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சலுகைக்கு ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனங்கள் ஆதரவளிக்கின்றன.

Continues below advertisement

காரென்ஸ் க்ளாவிஸிற்கான கியாவின் கடன் திட்டங்கள்:

புதிய கடன் திட்டத்தின் கீழ், வாகனம் மற்றும் பேட்டரிக்காக தனித்தனி சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, வெறும் 51 ஆயிரத்து 520 ரூபாயை மட்டுமே முன்பணமாக செலுத்தி காரென்ஸ் க்ளாவிஸ் கார் மாடலை சொந்தமாக்கிக் கொள்ளலாம். ஒரு கிலோ மீட்டர் தூர பயணத்திற்கு 3 ரூபாய் 30 காசுகள் என்ற கட்டண அடிப்படையில் பேட்டரியை வாடகைக்கு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.. இது காரென்ஸ் க்ளாவிஸ் மின்சார கார் மாடலை மேலும் எளிதில் அணுகக்கூடியதாகவும், விருப்பமானதாகவும் மாற்றுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வாகனத்திற்கு 60 மாதங்கள் வரையிலும், பேட்டரி பாகத்திற்கு 96 மாதங்கள் வரையிலும் தவணைக்கால விருப்பங்களை பெற முடியும். இதன்மூலம், வாடிக்கையாளர்கள் மலிவு விலையிலும், குறைந்த நிதிச் சுமையுடனும் மின்சார காரை சொந்தமாக்க முடியும்.

வேரியண்ட்விலை (எக்ஸ் - ஷோரூம்)முன் பணம்காருக்கான விலை (பேட்டரி இல்லாமல்)மாதாந்திர தவணை (ஆரம்ப தொகை)பேட்டரிக்கான வாடகை
ஸ்டேண்டர்ட்ரூ.17,99,000ரூ.51,520ரூ.12.84 லட்சம்ரூ.26,650ரூ.3.3/ கி.மீ.,
எக்ஸ்டெண்டர்ட்ரூ.21,99,000ரூ.60,452ரூ.15.94 லட்சம்ரூ.33,099ரூ.3.3/ கி.மீ.,

கிட்டத்தட்ட சுமார் 7 லட்சம் ரூபாய் வரை குறைவான விலையிலேயே காரென்ஸ் க்ளாவிஸ் கார் மாடலை சொந்தமாகக் புதிய திட்டம் வழிவகை செய்கிறது. 

கியா சார்ஜிங் நிலைய உட்கட்டமைப்பு

வாடிக்கையாளர்களுக்குத் தடையற்ற மற்றும் வசதியான வாகன உரிமையாளர் அனுபவத்தை உறுதி செய்வதற்காக, கியா நிறுவனம் உள்நாட்டில் தனது சார்ஜிங் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. MyKia செயலியில் உள்ள K-Charge தளத்தின் மூலம், பயனர்கள் நாடு முழுவதும் 15,000-க்கும் மேற்பட்ட சார்ஜிங் மையங்களை அணுகலாம். அத்துடன், மின்சார வாகனப் பயண வழித் திட்டமிடல், சார்ஜர்கள் உடனுக்குடன் கிடைக்கும் தன்மை மற்றும் எளிதாக்கப்பட்ட கட்டண விருப்பங்கள் போன்ற அம்சங்களையும் அறியலாம். மின்சார வாகனப் பயன்பாட்டை மேலும் ஆதரிக்கும் வகையில், 100-க்கும் மேற்பட்ட கியா டீலர்ஷிப்களில் DC ஃபாஸ்ட் சார்ஜர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு ஆதரவாக, நாடு முழுவதும் 267-க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்களுக்குத் தயாரான வொர்க்-ஷாப்களும் உள்ளன.

காரென்ஸ் க்ளாவிஸ் அம்சங்கள், வசதிகள்:

42KWh மறும் 51.4KWh ஆகிய இரண்டு பேட்டரி ஆப்ஷன்களை கொண்டுள்ள காரென்ஸ் க்ளாவிஸ், அதிகபட்சமாக 490 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃப்ரண்ட் வீல் ட்ரைவ்ப் அம்சத்துடன், முன்பக்கத்தில் சார்ஜிங் போர்டை கொண்டுள்ளது. உட்புறத்தில் 64 வண்ணங்களிலான ஆம்பியண்ட் லைட்டிங், பனோரமிக் சன்ரூஃப், வெண்டிலேடட் முன்புற இருக்கைகள், 8 ஸ்பீக்கர் போஸ் ஆடியோ சிஸ்டம், இரண்டாவது வரிசை இருக்கைகளை ஒரே டச்சில் மடக்கும் வசதி, இரண்டாவது வரிசை இருக்கைகளை 60:40 விகிதத்தில் மடிக்கும் வசதி ஆகியவை உள்ளன. தொழில்நுட்பங்கள் அடிப்படையில் டூயல் பனோரமிக் டிஸ்பிளே, கியா கனெக்டுடன் கூடிய 12.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட், வயர்லெஸ் மற்றும் ஆப்பிள் கார்பிளே மற்றும் வயர்லெஸ் சார்ஜர் ஆகியவை உள்ளன. பாதுகாப்பிற்காக லெவல் 2 ADAS, அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர் பேக்குகள், 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்கிங் ப்ரேக் மற்றும் ஃப்ரண்ட் பார்கிங் சென்சார்கள் ஆகியவை உள்ளன. 6 மற்றும் 7 சீட்டர் கான்ஃபிகரேஷனில் இந்த வாகனம் விற்பனை செய்யப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI