Kia EV Cars: கியா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் காரென்ஸ்,  கிளாவிஸ் மற்றும் ஃபிளாக்‌ஷிப் மாடலான EV9 ஆகிய மின்சார கார்களை அறிமுகப்படுத்த உள்ளது.


கியா நிறுவனம் அறிவிப்பு:


கியா நிறுவனத்தின் முதலீட்டாளர் மாநாட்டில், Carens EV உட்பட இரண்டு புதிய மாடல்கள் இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.  தனது மின்சார வாகனங்களின் போர்ட்ஃபோலியோவை மேம்படுத்த தங்களது பிளாக்‌ஷிப் மின்சார வாகனமான  EV9 மாடல் நடப்பாண்டே இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதாவது அடுத்த 18 மாதங்களில் 3 மின்சார கார் மாடல்களை, கியா நிறுவனம் இந்திய சந்தைக்கு கொண்டு வர உள்ளது.


Kia Carens EV, Clavis EV:


 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் AY-EV என்ற கோட் நேமை கொண்ட ஒரு வெகுஜன சந்தை மின்சார SUV ஐ அறிமுகப்படுத்த கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அறிமுகத்தின் போது இது  Clavis என்று அழைக்கப்படலாம். அதேநேரம் காரென்ஸ் கார் மாடலை அடிப்படையாக கொண்ட, KY-EV என்ற கோட் நேமை கொண்ட மின்சார வாகனமும் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெட்ரோல் பவர்டிரெய்னுடன் கூடிய AY SUV கார் மாடலானது அடுத்த ஆண்டின்  முதல் பாதியில் தான் விற்பனைக்கே வரக்கூடும், குறிப்பிட்ட இரண்டு EV கார் மாடல்களும் 2026 ஆம் ஆண்டளவில் மொத்தமாக  50,000-60,000 யூனிட்கள் அளவிற்கு இந்தியாவிற்கு கொண்டு வரப்படலாம். கியாவின் ஃபிளாக்‌ஷிப் மாடலான EV9  CBU முறைய்ல் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட உள்ளது. 


கியாவின் எதிர்கால திட்டங்கள்:


ஒட்டுமொத்தமாக, 2027 ஆம் ஆண்டிற்குள் புதியதாக 15 மின்சார கார் மாடல்கள் வெளியிட கியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, முதலாவதாக இந்த ஆண்டு EV3 மாடலை அறிமுகம் செய்கிறது. தொடர்ந்து , EV2 , EV4 மற்றும் EV5 போன்ற கூடுதல் மாடல்கள் முக்கிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும், மொத்தம் 6 மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன.. 2030 ஆம் ஆண்டிற்குள் 1.6 மில்லியன் மின்சார வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற இலக்கை அடைய, இன்னும் 1.3 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்ய வேண்டும்.  2026 ஆம் ஆண்டிற்குள் 5,87,000 யூனிட் வெகுஜன EV மாடல்களின் விற்பனையை அடைவது, அதாவது மொத்த EV விற்பனையில் 66 சதவிகிதத்தை எட்டவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


முக்கிய சந்தைகளில் EV விற்பனையின் விகிதம் 2024 இல் 13 சதவிகிததில் இருந்து 2030 ஆம் ஆண்டளவில் 52 சதவிகிதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  கொரிய மற்றும் வட அமெரிக்க சந்தைகளில்  40 சதவிகிதமகாவும் மற்றும் ஐரோப்பாவில் 79 சதவிகிதமாகவும் கியாவின் சந்தை பங்கு உயரும் என அந்நிறுவனம் கணித்துள்ளது. அதேநேரம், இந்திய மின்சார வாகன சந்தையில் கியா நிறுவனத்தின் பங்கு தொடர்பாக எந்த தகவலையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை. 



Car loan Information:

Calculate Car Loan EMI