கியா நிறுவனத்தின் பிரபல கார் மாடலான கார்னிவல் இந்தியாவின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் கிடைக்கும் கார் வகைகளில் கியா கார்னிவல் சொகுசு ரக கார். வெகு நாட்களாக எதிர்பார்த்த Kia Carniva LIMOUSINE+ என்ற மாடலை கியா அறிமுகம் செய்துள்ளது.
Multi-Purpose Vehicle ரக சொகுசு கார் வகைமையை சேர்ந்த கியா கார்னிவல் புதிய ஜென்ரேசன் கார் ஏராளமான வசதிகளுடன் வருகிறது.
இந்த மாடலில் Level 2 ADAS - Advanced Driver Assistance Systems கொடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியாவில் மிகவும் வெற்றிகரமான மாடலாக இருந்தது கியா கார்னிவல். சில காலம் கழித்து புதிய மாடலுடன் கம்பேக் கொடுத்துள்ளது. இது முந்தைய மாடலை விட பெரியது. 5155 மிமீ நீளம் கொண்ட கார்னிவல் மிகப்பெரியது ஆனால் வேன் போன்ற முந்தைய ஜென் மாடலை விட அதிக இட வசதியை கொண்டுள்ளது. வீல்பேஸ் நீளம் 3090மிமீ.
இந்த மாடல் காரில் அதிக தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. LIMOUSINE+ மாடலில் இரண்டாவது வரிசை ரிலாக்சேஷன் இருக்கைகள் உள்ளன. அவை சாய்ந்துகொள்ளும் இருகை, ஏ.சி.ஹீட்டர் வசதியுடன் காற்றோட்டத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு டிஸ்ப்ளே உள்ளது. இரண்டும் தலா 12.3 இன்ச் அளவில் உள்ளது. இது கியா கார்னிவல் காரின் மிகவும் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. இதில் ஒரு டிஸ்ப்ளே டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும் மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும்.
இது மற்ற அம்சங்களில் 12 ஸ்பீக்கர் BOSE ஆடியோ சிஸ்டம், எலக்ட்ரிக் டூயல் சன்ரூஃப், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, டச் ஸ்லைடிங் கதவுகள், டெயில்கேட், 3 வெவ்வேறு மண்டல காலநிலை கட்டுப்பாடு, 8 ஏர்பேக்குகள், ADAS, 360 டிகிரி கேமரா மற்றும் பல. கார்னிவலின் ஓட்டுநர் இருக்கை 12 வழிகளிலும், பயணிகள் இருக்கை 8 வழிகளிலும் அட்ஜெஸ்மெண்ட் செய்து கொள்ளலாம்.
இந்த எஞ்சின் 193bhp மற்றும் 441Nm நிட் உடன் 2.2 லி டீசல் எஞ்ஜின் கொண்டுள்ளது. அதே நேரத்தில் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்சன், கொடுக்கப்பட்டுள்ளது. முந்தையதை மாடலுடன் ஒப்பிடும் போது, நிறைய வசதிகளுடன் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது.
கியா கார்னிவல் Glacier White pearl மற்றும் Fusion black என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. Tucson/Umber என இரண்டு கலர் டோன்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.63.9 லட்சம் சந்தையில் கிடைக்கிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI