இந்தியாவைப் பொறுத்தமட்டில் கம்பீரமான இரு சக்கர வாகனத்தில் சாலைகளில் உலா வர பலரும் விரும்புவார்கள். இதனால் வசீகரமான, கம்பீரமான தோற்றம் கொண்ட இரு சக்கர வாகனத்தை விரும்புகின்றனர்.

Continues below advertisement

Keeway SR125:

அப்படி ஒரு கம்பீரமான தோற்றம் கொண்ட Keeway SR125 பைக்கின் தோற்றம், விலை, மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்த Keeway SR125 பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 53 ஆயிரத்து 051. இதில் 125 சிசி எஞ்ஜின் திறன் கொண்டது. 5 கியர்களை கொண்டது இந்த பைக். இந்த பைக்கின் எடை 120 கிலோ ஆகும். இதன் இருக்கை உயரம் 780 மி.மீட்டர் கொண்டது. இந்த Keeway SR125 பைக் வெள்ளை, கருப்பு மற்றும் சிவப்பு கொண்டது. 

Continues below advertisement

டாப் ஸ்பீட்:

அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 1 கியர் கீழேவும், 4 கியர் மேலேவும் இருந்தது. ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 681.5 கிலோமீட்டர் வரை செல்லலாம். 1 சிலிண்டர், ஏர் கூல்ட் மற்றும் 2 வால்வுகள் உள்ளது. பேட்டரி மெயிண்டனென்ஸ் இலவசம்.

9.56 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்போக் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம், பின்பக்கம் 17 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் முன்பக்க சஸ்பென்சன் இருந்தது. பின்பக்கம் டெலிஸ்கோபிக் காயில் ஸ்ப்ரிங் ஆயில் டேம்ப்ட் உள்ளது. சிங்கிள் டவுன்ட்யூப் ஃப்ரேம் சேசிஸ் உள்ளது. 160 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது. ரிசர்வ்ட் பெட்ரோல் 2.9 லிட்டர் ஆகும். 

எல்சிஇடி டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டல் வசதி உள்ளது. 2 ட்ரீப்மீட்டர்ஸ் டிஜிட்டல் ஆகும். டெகோமீட்டர் டிஜிட்டல் ஆகும். ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர் வசதி உள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/மோட்டார் கட் ஆஃப் வசதி உள்ளது.

இந்த பைக்கின் தோற்றமும், வசீகரமும் இளைஞர்களை கவரும் வகையில் உள்ளது. எடையும் கையாள்வதற்கு ஏதுவாக உள்ளது. அதேசமயம் இவர்கள் மைலேஜ் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம் என்று வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். 


Car loan Information:

Calculate Car Loan EMI