Kawasaki W175 Price Cut: விலை குறைப்பு நடவடிக்கையை தொடர்ந்து கவாசகி நிறுவனத்தின் W175 மாடலின் புதிய தொடக்க விலை, ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாயாக உள்ளது.
கவாசகி W175 மோட்டார்சைக்கிள்:
சமீபத்தில் முடிவடைந்த இந்திய பைக் வீக் 2023 இல், கவாசகி நிறுவனம் தனது W175 மாடலின் புதிய வேரியண்ட்டாக W175 ஸ்ட்ரீட்-ஐ அறிமுகப்படுத்தியது. அதன் விலை ஒரு லட்சத்து 35 ஆயிரம், ரூபாய் எனவும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஜப்பானிய பைக் தயாரிப்பாளரான கவாசகி தனது W175 ஸ்டேண்டர்ட் மாடலின் விலையில் ரூ.25,000 குறைத்து அறிவித்துள்ளது.
புதிய மாற்றங்கள் என்ன?
டீம் கிரீன் என்ட்ரி-லெவல் மோட்டார்சைக்கிள் நிறத்தைப் பொறுத்து ரூ.1.47 லட்சம் முதல் ரூ.1.49 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட விலைக் குறைப்பு நடவடிக்கை மூலம், கவாஸாகி டபிள்யூ175 விலையானது முறையிஏ ரூ.1.22 லட்சம் முதல் ரூ.1.31 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு, கவாசகி W175 மாடலில் புதியதாக இரண்டு வண்ண ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, மெட்டாலிக் ஓஷன் ப்ளூ (ரூ. 1.31 லட்சம்) மற்றும் மெட்டாலிக் கிராஃபைட் கிரே (ரூ. 1.29 லட்சம்). தற்போது எபோனி (ரூ. 1.22 லட்சம்) மற்றும் கேண்டி பெர்சிமோன் ரெட் (ரூ. 1.24 லட்சம்) ஆகிய வண்ண விருப்பங்களுடன் இந்த மாடல் கிடைக்கிறது.
பவர் டிரெயின்:
பவர்-டிரெயினை பொறுத்தவரையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. 177சிசி ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 13ஹெச்பி மற்றும் 13.2என்எம் ஆற்றலை உருவாக்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள்கள் ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் மாடலுடன் சந்தையில் போட்டியிடுகிறது. இந்த பிராண்டின் மிகவும் மலிவு விலையில் வழங்கப்படும் மோட்டார்சைக்கிளாகவும் இது உள்ளது. இதன் காரணமாக ஆண்டு இறுதியில் இருசக்கர வாகனங்களை வாங்க விரும்புவோர் மத்தியில், கவாசகி W175 மாடலின் விலை குறைப்பு நடவடிக்கை நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள்:
W175 ஆனது எளிமையான ஆனால் வித்தியாசமான அனுபவத்தை மையமாகக் கொண்ட ரெட்ரோ பைக் ஆகும். முன்பக்கத்தில் 30 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் கிடைக்கும். முன் மற்றும் பின்புற இடைநீக்கம் கடினமான சட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சக்கர அளவுகள் முன்புறத்தில் 80/100-17 ஆகவும், பின்புறத்தில் 100/90-17 ஆகவும் உள்ளது. வயர்-ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், டியூப்லெஸ் டயர்களைப் பெறுகிறது. சிறிய எல்சிடி டிஜிட்டல் இன்செட் உடன், அடிப்படை ஆலசன் முகப்பு விளக்குக் மற்றும் பெரும்பாலும் அனலாக் இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஒட்டுமொத்த டிசைன் தீம் உடன் ஸ்பீடோமீட்டர் உள்ளிட்ட ரெட்ரோ டச்களுடன் தொடர்கிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI