ஜப்பான் நாட்டை சேர்ந்த கவாசகி நிறுவனத்திற்கும் அந்த நிறுவன பைக்குகளுக்கும் ஆரம்ப காலத்தில் இருந்தே இந்திய சந்தையில் பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் 18,000 ரூபாய் வரை பைக்குகள் விலையேற்றம்பெறும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 




மாருதி சுசூகி, ரெனால்ட் மற்றும் நிசான் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய கார்கள் இந்திய சந்தையில் ஏப்ரல் 1 2021 முதல் விலையேற்றப்பெறும் என்பதை முன்பே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் கவாசகி நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது. கவாசகி நிஞ்ஜா ஸ்போர்ட் டூரர் மற்றும் கவாசகி வேர்ஸிஸ் ஆகிய மாடல்கள் விலையேற்றம் பெறுகின்றது. 




அதேசமயம் தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி ஏற்கனவே வெளியான நிஞ்ஜா 300 மற்றும் நிஞ்ஜா ZX-10R மடல்களில் எந்தவித விலைஅதிகரிப்பும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிஞ்ஜா 300 பைக்கள் BS6 வகையை சார்ந்தது, கடந்த மாதம் அந்த மாடல் வெளியானபோதே BS4 வகை வண்டிகளை விட 19,000 ரூபாய் கூடுதலாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  


Car loan Information:

Calculate Car Loan EMI