தொடர்ந்து மூன்றாவது நாளாக 2000ஐ கடந்த தொற்று - அச்சத்தில் தமிழகம்.!

நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 2279 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

தொடர்ந்து மூன்றாவது நாளாக தமிழகத்தில் கொரோனா தொற்றின் அளவு 2000ஐ கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2279 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 815 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, கோவை ஆகிய பகுதிகளில் 200-க்கு அதிகமான மக்களும் திருவள்ளூர் மற்றும் தஞ்சை ஆகிய பகுதிகளை 100-க்கு அதிகமான மக்களும் கொரோனாவால் பாதிக்கப்டுட்டுள்ளனர்.   

Continues below advertisement

சென்னையில் இருவர் உள்பட நேற்று தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக செங்கல்பட்டு பகுதியில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தபிறகு மீண்டும் தமிழகத்தில் லாக்கடவுன் அறிவிக்கப்படுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 


இந்நிலையில் இந்திய அளவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா தொற்றின் அளவு அதிகமாக உள்ள நிலையில் அங்கு 15 நாள் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அங்கு இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola