இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பட்ஜெட் விலை முதல் சொகுசு வாகனங்கள் வரை மின்சார ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகி வருகிறது.

Continues below advertisement

 Joy e-bike Glob:

பட்ஜெட் விலையில் இ ஸ்கூட்டர் தயாரிக்கும் மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக திகழ்வது Joy e-bike நிறுவனம். இவர்களின் பட்ஜெட் விலை இ ஸ்கூட்டர்களில் ஒன்று Joy e-bike Glob ஆகும். இதன் தரம், விலை, மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.

இந்த இ ஸ்கூட்டரில் 1.44 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 5 மணி நேரம் ஆகிறது. ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 60 கி.மீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 

Continues below advertisement

வசதிகள்:

பிஎல்டிசி மோட்டார் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 1 போர்ட்டபிள் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் அவெய்லபிளிட்டி இதில் உள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஐபி 67 பேட்டரி ஐபி ரேட்டிங் ஆகும். ஸ்டாண்டர்ட் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. 2 பிஸ்டன் காலிபர் இதுவாகும். அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 10 இன்ச் சக்கரம், பின்பக்கம் 10 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் ஷாக் அப்சார்பர்ஸ் சஸ்பென்சன் பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இ ஸ்கூட்டரின் எடை 66 கிலோதான் ஆகும். ஆனால், 140 கிலோவரை இழுத்துச் செல்லும் ஆற்றல் கொண்டது. 3 வருடம் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 1 வருடம் மோட்டார் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.

எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் உள்ளது. ஓடோமீட்டர் அனலோக் வசதி உள்ளது. 1 ட்ரிப்மீட்டர் டிஜிட்டலில் உள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது.

யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. ஆன்டி தெஃப்ட் சிஸ்டம் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. கில் சுவிட்ச் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகலிலும் எரியும் விளக்குகள் வசதி உள்ளது. எல்இடி ப்ரேக்/டெயில் விளக்குகள் வசதி உள்ளது.எல்இடி சிக்னல் விளக்குகள் வசதி உள்ளது.

விலை என்ன?

இதன் விலை ரூபாய் 69 ஆயிரத்து 627 ஆகும். எடை குறைவாகவும், பட்ஜெட் விலையிலும் உள்ள இந்த Joy e-bike Glob இ ஸ்கூட்டர் வீட்டில் உள்ள முதியவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. அருகில் எங்கேனும் சென்று வருவதற்கு மிகவும் வசதிகரமாக இந்த Joy e-bike Glob இ ஸ்கூட்டர் உள்ளது.

 


Car loan Information:

Calculate Car Loan EMI