Jeep Car Discount: ஜீப் நிறுவனத்தின் கார் மாடல்களுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டும், விற்பனையில் சோபிக்காதது ஏன்? என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

விற்பனையில் சோபிக்காத ஜீப்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜீப் நிறுவனத்தின் வ்ராங்லர் மாடலை தவிர, அதன் மற்ற அனைத்து எஸ்யுவிக்கள் மீதும் ஜுன் மாதத்தில் அதிரடியான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் காம்பஸ்,மெரிடியன் மற்றும் கெட் செரோகி ஆகியவையும் அடங்கும். ரூ.4 லட்சம் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ள சலுகையானது, நிறுவனத்தின் கார்களின் விற்பனை மிகவும் மந்தமடைந்துள்ளதையே காட்டுகிறது. உதாரணமாக, கடந்த 6 மாதங்களில் ஜீப் நிறுவனம் டீலர்களுக்கு சராசரியாக 147 காம்பஸ் எஸ்யுவிக்களை மட்டுமே அனுப்பியுள்ளது. அதேகாலகட்டத்தில் மெரிடியன் எஸ்யுவிக்கள் சராசரியாக 102 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இந்நிலையில் ஜீப் எஸ்யுவிக்களின் மீது அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் ஆனது, நகரம் மற்றும் கையிருப்பில் உள்ள யூனிட்களை பொருத்து மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஜீப் காம்பஸ் - ரூ.2.9 லட்சம் சலுகை

பண தள்ளுபடி, இலவச அக்செசரிஸ், கார்ப்ரேட் தள்ளுபடி மற்றும் இதர எக்சேஞ்ச் தள்ளுபடிகளை உள்ளடக்கி, ஜுன் மாதத்தில் காம்பஸ் மாடலுக்கு ரூ.2.9 லட்சம் ரூபாய் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2017ம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ள இந்த எஸ்யுவி, கடந்த 2021ம் ஆண்டு ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருந்தாலும், தற்போது டீசல் எரிபொருள் ஆப்ஷன் மட்டுமே உள்ளது. 170hp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய  2 லிட்டர்  4 சிலிண்டர் இன்ஜின் ஆனது 6 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 9 ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இதன் டாப் ஸ்பெக் S வேரியண்டில் மட்டுமே 4X4 தொழில்நுட்ப அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. காம்பஸ் கார் மாடலின் விலை ரூ.18.99 லட்சத்திலிருந்து ரூ.32.41 லட்சம் வரை நீள்கிறது. 

இதையும் படியுங்கள்: Mahindra Thar Facelift: தார் காரை மாற்றும் மஹிந்திரா - ஃபேஸ்லிஃப்டில் இவ்வளவு அப்கிரேட்களா? இன்ஜினில் அப்டேட்டா?

ஜீப் மெரிடியன் - ரூ.3.9 லட்சம் சலுகை

எண்ட்ரி லெவலில் 5 சீட் வேரியண்டிலும், மூன்று 7 இருக்கை வேரியண்ட்களிலும் கிடைக்கும் ஜீப் மெரிடியனானது ரூ.3.9 லட்சம் வரை சலுகைகளை பெறுகிறது. இதில் கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்களுக்கு கார்ப்ரேட் டிஸ்கவுண்டாக வழங்கப்படும் ரூ.1.3 லட்சமும் அடங்கும். காம்பஸின் பெரிய வெர்ஷனில் உள்ள பவர்ட்ரெயின் விருப்பங்கள், மெரிடியனில் பகிரப்படுகிறது. இதன் விலை ரூ.24.99 லட்சம் முதல் ரூ.38.79 லட்சம் வரை நீள்கிறது.

ஜீப் கிராண்ட் செரோகி - ரூ.3 லட்சம் சலுகை

ஜீப் நிறுவனத்தின்ஃபிளாக்‌ஷிப் எஸ்யுவி ஆன கிராண்ட் செரோகியை வாங்குபவர்களுக்கு ரூ.3 லட்சம் வரையிலான சலுகைகளுடன், ஏராளமான விற்பனைக்கு பிறகான சேவைகளையும் இலவசமாக அணுகலாம். அதில், வாரண்டி பேக், அட்வென்சர் கான்சீர்ஜ் சர்வீஸ் உள்ளிட்ட பல அடங்கும். இதில் இடம்பெற்றுள்ள 272hp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆனது, 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸை கொண்டுள்ளது. இதில் 4 வீல் ட்ரைவ் சிஸ்டமும் உள்ளது. இதன் விலை ரூ.67.50 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

இந்தியர்கள் ஆர்வம் காட்டாதது ஏன்?

அமெரிக்காவைச் சேர்ந்த ஜீப் நிறுவனத்தின் கார் மாடல்களுக்கு பல மாதங்களாகவே ஏராளமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்படுகின்றன. ஆனாலும், இந்தியர்கள் அதிகளவில் இந்நிறுவன வாகனங்கள் மீது கவனம் செலுத்தவில்லை. அதிகப்படியான விலை, குறைந்த மாடல் ரேஞ்சுகள் மற்றும் விற்பனைக்கு பிறகான சேவையில் உள்ள சிக்கல்கள் காரணமாக ஜீப் நிறுவன விற்பனை மந்தமாக உள்ளது. அந்நிறுவனத்தின் காம்பஸ் மாடல் ஆரம்பத்தில் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், அடுத்தடுத்த விலை உயர்வு மற்றும் ஹுண்டாய் மற்றும் டாடா போன்ற போட்டியாளர்களுக்கு இணையாக முக்கிய அப்டேட்களை (பணத்திற்கு நிகரான மதிப்புகளை) கொண்டு வராததும் ஜீப்பின் விற்பனை சரிய காரணமாக மாறின. இதன் விளைவாகவே தற்போது ரூ.4 லட்சம் வரை சலுகை மற்றும் தள்ளுபடி அறிவித்தும் ஜீப்பின் விற்பனை சூடுபிடிக்காமலே உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI