Mahindra Thar 3 Door Facelift: நடப்பாண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில், மஹிந்திரா தார் காரின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் சந்தைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்ட்:
மஹிதிராவின் பிரபலமான ஆஃப் - ரோடரான தார் கார் மாடல், சில பாகங்களை மறைத்து சாலையில் சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. இது அந்த வாகனத்தில் வரவுள்ள சில அப்டேட்களை குறிக்கிறது. தார் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இல்லை. இந்நிலையில் வெளியாகியுள்ள தகவல்கள், அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற தார் 5 டோர் எடிஷனான ராக்ஸில் உள்ள சில அம்சங்கள், தார் 3 டோர் ஃபேஸ்லிஃப்டில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. மிட்-சைக்கிள் அப்டேட்டாக மட்டுமே இருப்பதால், தார் ஃபேஸ்லிஃப்டில் தோற்றத்திற்கான அப்டேட்கள் பெரிய அளவில் இருக்காது என கருதப்படுகிறது.
தார் ஃபேஸ்லிஃப்ட் - திருத்தங்கள் என்ன?
ஸ்டைலிங்கை மேம்படுத்தும் நோக்கில் சில குறுகிய அப்டேட்கள் மட்டுமே வழங்கப்படலாம். உதாரணமாக முன்பக்க கிரில், பம்பர்கள் மற்றும் லைட்டிங் அமைப்புகள் திருத்தப்படலாம். உட்புறத்திலும் லேசான திருத்தங்களை மஹிந்திரா மேற்கொள்ளலாம். தார் ராக்ஸ் கார் மாடலில் அறிமுகப்படுத்தப்பட்ட சில அம்சங்கள், சாஃப்ட்வேர் அப்கிரேடாக 3 டோர் தார் காரிலும் வழங்கப்படலாம். புதிய ட்ரிம் டெக்ஸ்ட்சர்ஸ் மற்றும் ஹார்வேட் அப்டேட்களும் வழங்கப்படலாம் என ஆட்டோமொபைல் துறை தகவல்கள் குறிப்பிடுகின்றன.
தார் ஃபேஸ்லிஃப்ட்: இன்ஜினில் அப்கிரேடா?
இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கூட கவனத்தை ஈர்க்கும் வகையில் மேம்படுத்தப்படலாம். இன்ஜின் அடிப்படையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது. அதவாது 117bhp மற்றும் 300Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் டர்போசார்ஜ்ட் டீசல் இன்ஜினும், 150bhp மற்றும் 320Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 2.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜினும் அப்படியே தொடர உள்ளது. இதுபோக 130bhp மற்றும் 300Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 2.2 லிட்டர் டீசல் இன்ஜினும் இடம்பெற உள்ளது. 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் டார்க் கன்வேர்டர் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன்கள், 2 வீல் ட்ரைவ்ஸ் மற்றும் 4 வீல் ட்ரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கப்பெறுகிறது.
தார் ஃபேஸ்லிஃப்டில் இணைய உள்ள அம்சங்கள்:
5 டோர் தார் எடிஷனான ராக்ஸில் நேவிகேஷன் உடன் கூடிய 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், AdrenoX, ஆப்பிள் கார்பிளே, ஆன்ட்ராய்ட் ஆட்டோ கனெக்டிவிட்டி, ஹர்மன் கார்டன் ஆடியோ, லெவல் 2 ADAS போன்ற அம்சங்கள் நிறைந்துள்ளன. இதுபோக ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், வயல்ரெஸ் சார்ஜிங் ஃபெஸிலிட்டி, ஆட்டோ ஹோல்ட் உடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்கிங் பிரேக், பனோரமிக் சன்ரூஃப், 6 ஏர் பேக்குகள், 360 டிகிரி கேமரா என பல அம்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றில் சில தற்போதைய தாரில் இல்லாத நிலையில், ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் மூலம் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஃபேஸ்லிஃப்டின் விலை சற்றே பிரீமியமாக உயரக்கூடும்.
விற்பனையில் அசத்தும் தார்:
மஹிந்திரா நிறுவனத்தின் தார், பிராண்டின் சார்பில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக உள்ளது. 5 டோர் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் கூட தாரின் விற்பனை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன. இருப்பினும் கடந்த 5 ஆண்டுகளாக சந்தையில் உள்ள இந்த எஸ்யுவி தற்போது மிட்-லைஃப் அப்டேட்டை பெற உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI