ஜாவாவின் கான்செப்ட் பைக்கான பெராக் "ஜாவா 42 பாபர்" என்ற பெயரில் ரூ. 2.06 லட்சத்துக்கு அறிமுகமாகி உள்ளது.


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'பேக்டரி கஸ்டம்' பைக்கான ஜாவா பெராக் அதே எஞ்சின் மற்றும் சிங்கிள் பீஸ் சீட்டுடன் எவ்வித மாற்றமும் இன்றி "ஜாவா 42 பாபர்" என பெயரில் அறிமுகமாகி உள்ளது. இது மிஸ்டிக் காப்பர், மூன்ஸ்டோன் ஒயிட் மற்றும் டூயல் டோன் ஜாஸ்பர் ரெட் என மூன்று நிற தேர்வுகளுடன் கிடைக்கிறது. டெஸ்ட் ரைட் மற்றும் டெலிவரி அடுத்த வாரம் தொடங்குகிறது.


வட்ட வடிவ ஹெட்லேம்ப், புத்தம் புதிய எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், அந்த இன்ஸ்ட்ருமெண்ட் கன்சோலை இயக்கும் பட்டன்களுடன் கூடிய சிங்கிள் பீஸ் ஹேண்டில்பார், கச்சிதமான எரிபொருள் டேங்க் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சொகுசான இருக்கை என இந்த ஜாவா 42 பாபரில் எக்கச்சக்க மாற்றங்கள்.






இந்த பைக்கின் தனித்துவமான மிதக்கும் இருக்கையை நமது வசதிக்கேற்ப 2 விதமாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம், ஓட்டுநரின் விருப்பப்படி முன்புறம் அல்லது பின்புறம் நகர்த்தி கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


முன்பே கூறியது போல ஜாவா பெராக்கில் இருந்த அதே 334சிசி எஞ்சின் தான் இந்த ஜாவா 42 பாபர் பைக்கிலும் உள்ளது, 30.64 PS பவரையும் 32.74 nm டார்க்கையும் வழங்கும் இந்த எஞ்சின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.






ஜாவா 42 பாபர் நிறங்களின் தேர்வுகளுக்கு ஏற்ப மூன்று வேரியண்ட்கள் மற்றும் மூன்று விலைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதில் ஆரம்ப வேரியண்ட்டான "மிஸ்டிக் காப்பர்" ரூபாய் 2,06,500/-க்கும், அடுத்த வேரியண்ட் "மூன்ஸ்டோன் ஒயிட்" ரூபாய் 2,07,500/-க்கும், டாப் வேரியண்ட்டான "ஜாஸ்பர் ரெட்" ரூபாய் 2,09,187/-க்கும் விற்பனைக்கு வந்துள்ளது.






ஜாவா 42 பாபர் விலை பட்டியல்:


மிஸ்டிக் காப்பர் - ரூ. 2,06,500/-
மூன்ஸ்டோன் ஒயிட் - ரூ. 2,07,500/-
ஜாஸ்பர் ரெட் (டூயல் டோன்) - ரூ. 2,09,187/-


Car loan Information:

Calculate Car Loan EMI