ஒரு காலக்கட்டத்தில் இந்தியாவில் பிரபலமாக இருந்த இத்தாலிய ஸ்கூட்டர் பிராண்டான Lambretta மீண்டும் புதிய அவதாரத்தில் இந்தியாவிற்கு வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


மீண்டும் கால்பதிக்கிறது லாம்ப்ரெட்டா:


ஒரு காலத்தில் குடும்பங்கள் மற்றும் தொழிலதிபர்களின் நம்பிக்கைக்குரிய தேர்வாக இருந்த இத்தாலிய ஸ்கூட்டர் பிராண்ட் லாம்ப்ரெட்டா. 1960 ஆம் ஆண்டு பரவலாக பயன்படுத்தப்பட்ட இந்த ஸ்கூட்டர் பிராண்டானது பேர்ட் மொபிலிட்டியுடன் இணைந்து மீண்டும் இந்திய சந்தைகளில் கால் பதிக்கவுள்ளது. உறுதியான மற்றும் சற்று பருமனாக காணப்பட்டும் இந்த ஸ்கூட்டர்  இந்திய திரைப்படங்கள் மட்டுமல்லாது ஹாலிவுட் திரைப்படங்களிலும் கூட அதிகமாக பயன்படுத்தப்பட்டது. Lambretta பிராண்டின் உரிமையாளரான  உரிமையாளரான Walter Scheffrahn, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான முதலீட்டில்  Bird Group உடன் இணைந்து கால் பதிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.




சிறப்பம்சம் :


Innocenti SA  என பெயர் வைக்கப்பட்டுள்ள  Lambretta   வகை ஸ்கூட்டரானது. 200 cc மற்றும் 350 cc க்கு இடைப்பட்ட திறன் கொண்ட G, V மற்றும் X   என உயர்-பவர் ஸ்கூட்டர்களை வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  Lambretta   ஆனது 2024 ஆம் ஆண்டு இறுதியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் அறிமுகப்படுத்தும் என தெரிகிறது. பைக் நிறுவனத்தின் உரிமையாளர்  Walter Scheffrahn கூறுகையில் “ இந்தியாவில் எங்களது பிராண்ட்  நல்ல மதிப்பை பெற்றிருக்கிறது. இது மக்கள் மத்தியில் நல்ல உறவை பெற்றிருக்கிறது. கடந்த கால மேஜிக்கை மீண்டும் நாங்கள் செய்ய விரும்புகிறோம் . எங்களின் டாப்-எண்ட் ரேஞ்சுடன் இந்தியாவில் ஸ்கூட்டர்களின் ஃபெராரியை உருவாக்குவதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்,” என்று ஷெஃப்ரான் வணிக நாளிதழ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.




உள்நாட்டு உற்பத்தி :


2023 ஆம் ஆண்டு இந்திய வாகன சந்தையில் நுழைய தேவையான யூனிட்களின் இறக்குமதிகள் மற்றும் மூலப்பொருட்கள் இறக்குமதியில் நிறுவனம் கவனம் செலுத்தவுள்ளது. 2024 ஆம் ஆண்உடு முற்றிலும் மேட் இன் இந்தியா தயாரிப்புகளாக   Lambretta  ஸ்கூட்டர்ஸ் உருவாகவுள்ளது.ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் தடம் பதித்துள்ள Lambretta தற்போது கிட்டத்தட்ட 70 நாடுகளில் தனது விற்பனையை அதிகரித்துள்ளது. இந்தியாவில் அமைக்கப்படும் இந்நிறுவனத்தின் ஆலை அதன் மிகப்பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்கிறார்  வால்டர். 100,000 அலகுகள் திறன் கொண்ட உற்பத்தி வசதி 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செயல்பாட்டுக்கு வரலாம்.கிடைக்கும் லாபத்தில் 51 சதவிகிதம் லாம்ப்ரெட்டாவுக்கும், மீதமுள்ள 49 சதவிகிதம் பேர்ட் குழுமத்திற்கும் இருக்கும் என கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 50-50 ஷேர்தான்.


 


 


Car loan Information:

Calculate Car Loan EMI