இந்தியாவில் முதலீடு செய்யவுள்ள டெஸ்லா நிறுவனத்த்தின் இறுதிகட்ட திட்ட முடிவுகள் தயாராகிவிட்டதாம். அமெரிக்காவில் மின்சார வாகன உற்பத்தியில் முன்னிலையில் உள்ள டெஸ்லா நிறுவனம் மின்சார கார்களை அடுத்த ஆண்டு முதல் இந்தியாவுக்கு அனுப்ப உள்ளதாகவும் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஒரு தொழிற்சாலையை அமைக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என டெல்லி வட்டாரங்களில் பேச்சுகள் அடிபடுகின்றன. 


டெஸ்லா நிறுவனம்:


ஜனவரியில் நடக்கும் வைப்ரன்ட் குஜராத் குளோபல் உச்சிமாநாட்டில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் எனவும் கூறப்படுகின்றது. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகியவை ஏற்கனவே மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் ஏற்ற சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்டிருப்பதால், குஜராத், மஹாராஷ்ட்ரா மற்றும் தமிழ்நாடுதான் டெஸ்லாவின் டாப் 3 இடங்களில் உள்ளதாம். 


டெஸ்லா  நிறுவவுள்ள ஒவ்வொரு ஆலையிலும் குறைந்தபட்ச முதலீடாக  2 பில்லியன் டாலராக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டிலிருந்து வாகன உதிரிபாகங்களை வாங்குவதை 15 பில்லியன் டாலர் அளவிற்கு இருக்கவேண்டும் என்றும் திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றதாம்.  இந்தியாவில் முதலில் பேட்டரிகளை உற்பத்தி செய்ய டெஸ்லா தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் இதற்கான உற்பத்திச் செலவு என்பது குறைவு. 


அதேநேரத்தில் இவையெல்லாம் டெஸ்லா தரப்பில் பரிசீலனையில் உள்ளவைதான் எனவும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் திட்டங்களை மாற்றலாம் எனவும் கூறப்படுகின்றது. டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் கடந்த ஜூன் மாதம், டெஸ்லா இந்தியாவில் ஒரு "குறிப்பிடத்தக்க அளவு முதலீடு" செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான பணிகள் 2024 ஆம் ஆண்டில் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.


பதில் தராத மஸ்க்:


ஆட்டோமொபைல் துறையை மேற்பார்வையிடும் இந்தியாவின் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள் மற்றும் நிதி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகங்கள் கருத்துக்கான கோரிக்கைகளுக்கு எலான் மஸ்க் அந்த நேரத்தில் குறிப்பிடும்படியான எந்த பதிலையும் அளிக்கவில்லை. டெஸ்லா தரப்பிலும் பதில் அளிக்கப்படவில்லை. 


உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டிற்குள் நுழைவது, நடுத்தர வர்க்க நுகர்வோர் மத்தியில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவது, தற்போது அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனியில் தொழிற்சாலைகளைக் கொண்ட டெஸ்லாவுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என ஆட்டோ மொபைல் துறையைச் சார்ந்த பலர் கூறிவருகின்றனர். பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான இந்திய அரசு EV-களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், தூய்மையான போக்குவரத்தை விரைவாக ஏற்றுக்கொள்ளவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது.


மின்சார கார்கள்:


அந்த முயற்சிகள் இருந்தபோதிலும், இந்தியாவின் EV வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. BloombergNEF படி, கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட மொத்த பயணிகள் வாகனங்களில் பேட்டரி மூலம் இயங்கும் கார்கள் வெறும் 1.3% மட்டுமே. மின்சார கார்களின் அதிக முன் செலவு மற்றும் சார்ஜிங் நிலையங்களின் பற்றாக்குறை காரணமாக மக்கள் வாங்க தயக்கம் காட்டுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதிக விலைக்கு விற்கப்படுவதால் டெஸ்லா நிறுவனம் நேரடியாக இந்தியாவில் கார்களை இறக்குமதி செய்வதில்லை. எனவே முதலில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கார்கள் விற்பனைக்கு வரும்போது, ​​​​அதன் தொடக்கவிலை $20,000 வரை இருக்கும் எனவும் அதாவது இந்திய மதிப்பில்  ரூ 16 முதல் 17 லட்சங்கள் வரை இருக்கும் என கூறப்படுகின்றது. 


Car loan Information:

Calculate Car Loan EMI