இந்தியாவில் இப்போது 150க்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றில் எதை வாங்குவது என்று முடிவு செய்வது சிரமம்தான். எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை குறைவாக இருந்தால் போதும் என்பது சரியான முடிவாக இருக்காது. ஸ்கூட்டரின் தரம், அதன் அம்சங்கள், ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் எத்தனை கிலோ மீட்டர் ஓடும் என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். விலையைப் பொறுத்தவரையில் ரூ.25,000 முதல் ரூ.2 லட்சம் வரையில் பல்வேறு விலைகளில் நிறைய ஸ்கூட்டர்கள் உள்ளன. 2021ஆம் ஆண்டிலும் நிறைய ஸ்கூட்டர்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்பெசிபிகேஷன்களை நமக்கு வழங்குகின்றன. அவற்றில் எது உங்களுடைய தேவை என்பதை தேர்ந்தெடுத்து முடிவெடுப்பது சிறந்ததாக இருக்கும். இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் முக்கியமான சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இங்கு.


ஓலாவின் எஸ் 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (S1 Electric Scooter): இதன் விலை 99,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 121 கிமீ ரேஞ்ச் மற்றும் 90 கிமீ வேகம் செல்லும் திறன் கொண்டது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முழுமையாக சார்ஜ் ஆக ஐந்து மணி நேரத்திற்கும் குறைவான நேரமே ஆகும். ஓலா ஸ்கூட்டரில் S1 Pro மாடலும் உள்ளது, இதன் விலை 1 லட்சத்து 30 ஆயிரம் மற்றும் அதிக ரேஞ்ச், அதிக வேகம் மற்றும் பிற புதிய அம்சங்களுடன் வருகிறது.



டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டர்: 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. டிவிஎஸ்ஸின் இந்த மின்சார ஸ்கூட்டர் மிகவும் சிறந்தது. இதில் நீங்கள் 4.4 KW திறன் கொண்ட மின்சார மோட்டார் உள்ளது. இதனுடன், இந்த ஸ்கூட்டர் ஒரு முறை முழு சார்ஜிங்கில் சுமார் 75 கிமீ ஓடுகிறது. அதன் வேகத்தைப் பற்றி பேசுகையில், அது மணிக்கு 78 கிமீ வேகம் செல்லும். இதில் 6 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க்கையும் கொண்டுள்ளது. இந்திய சந்தையில் அதன் விலை சுமார் 1.15 லட்சம். இது, ஸ்கூட்டர் இயக்க தொடங்கி  4.2 வினாடிகளிலேயே  மணிக்கு 40 கிமீ வேகத்தில் செல்லும்.


பஜாஜ் ஆட்டோவின் சேதக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறந்த தோற்றத்துடன் கூடிய ஸ்டைலான ஸ்கூட்டர் இது. சேதக் நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டர் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சேதக் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. எண்ட்ரி லெவல் அர்பன் மாடல் மற்றும் பிரீமியம் வகை. இந்த இ-ஸ்கூட்டர் 3.8 கிலோவாட் பவர் மற்றும் 4.1 கிலோவாட் பவர்  எலக்ட்ரிக் மோட்டார் உள்ளது. முழு சார்ஜிங்கிற்குப் பிறகு, இந்த ஸ்கூட்டர்,  ஈக்கோ பயன்முறையில் 95 கிமீ தூரம் வைரையிலும், ஸ்போர்ட் பயன்முறையில் 85 கிமீ வரையிலும் செல்லும்.



எதார் எனர்ஜி: இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் EV ஸ்டார்ட்அப்களில் ஏதார் எனர்ஜி ஒன்றாகும். இந்த பிராண்ட் தனது ஸ்கூட்டரை தென்னிந்திய நகரங்களான பெங்களூரு மற்றும் சென்னை ஆகியவற்றில் மட்டுமே அறிமுகப்படுத்துகிறது, ஆனால் விரைவில் டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் தனது வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. Ather 450X  என்பது நிறுவனத்தின் முதன்மையான மின்சார ஸ்கூட்டர் ஆகும். இந்த ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 107 கிமீ மைலேஜ் அளிக்கும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.1 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.


ஆம்பியர் மேக்னஸ்: சமீபத்தில் ஆம்பியர் எலக்ட்ரிக் நிறுவனம் Magnus EX  என்னும் மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. Magnus EX பல புதுமையான மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் EX புனே ஷோரூம் விலை ரூ.68,999. மேக்னஸ் EX,   முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால், 121 கிமீ மைலேஜ்  கொடுக்க வல்லது.


இவை தவிர்த்து அதே விலை வகுப்பில் மேலும் சில ஸ்கூட்டர்களும் கிடைக்கின்றன.


Simple Energy One – ரூ.1.09 லட்சம்


Hero Electric Optima – ரூ.51,440 முதல் ரூ.67,440


Hero Electric Flash – ரூ.46,640 முதல் ரூ.56,940


Hero Electric Atria – ரூ.63,640


Hero Electric Photon – ரூ.71,440


Hero Electric NYX – ரூ.62,954 முதல் ரூ.67,440


Hero Electric Dash – ரூ.50,000 முதல் ரூ.62,000


Benling India Falcon – ரூ.62,200 முதல் ரூ.71,248


Komaki XGT KM – ரூ.42,500


PURE EV Epluto – ரூ.71,999


PURE EV Epluto 7G – ரூ.83,999


AMO Electric Jaunty – ரூ.61,442 முதல் ரூ.87,692


Car loan Information:

Calculate Car Loan EMI