ஹுண்டாய் நிறுவனத்தின் வெர்னா செடான் கார் மாடல்,  பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார்களை பெற்று அசத்தியுள்ளது.


ஹுண்டாய் வெர்னா கார்:


NCAP எனப்படும் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தின் 'இந்தியாவிற்கான பாதுகாப்பான கார்கள்' என்ற பரப்புரையின் ஒரு பகுதியாக,  ஹுண்டாய் நிறுவனத்தின் வெர்னா செடான் மாடல் கார் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன் முடிவில், அனைத்து பாதுகாப்பு அம்சங்களுக்கான தேவைகளையும் பூர்த்தி செய்து அந்த கார் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கான பாதுகாப்பையும் இந்த கார் மாடல் உறுதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவின் ஐந்தாவது கார்:


ஏற்கனவே அனைத்து தரப்பினருக்குமான பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்து,  ஸ்கோடா ஸ்லாவியா, குஷாக், வோக்ஸ்வாகன் விர்டஸ் மற்றும் டைகுன், ஆகிய கார் மாடல்கள் 5 ஸ்டார்களை பெற்றுள்ளன. அந்த வரிசையில் ஐந்தாவது மாடலாக ஹுண்டாய் வெர்னா காரும் இணைந்துள்ளது. அதேநேரம், 2022ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குளோபல் என்சிஏபியின் புதிய, கடுமையான விதிமுறைகளின்படி ஹூண்டாய் வெர்னா மட்டுமே நடைமுறைக்கு வந்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். குளோபல் என்சிஏபியின் புதிய கிராஷ் டெஸ்ட் நெறிமுறைகள், விபத்தின் போது முன்பக்க மற்றும் பக்கவாட்டுபாதுகாப்பையும், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோலையும் (ESC) உறுதி செய்கிறது. பாதுகாப்பிற்கான 5 ஸ்டார்களை உறுதி செய்ய பாதசாரிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட மற்ற பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வதும் அவசியமாகும். அதையும் வெர்னா செடான் உறுதி செய்துள்ளது.


பரிசோதனையில் பெற்ற புள்ளிகள்:


பரிசோதனையின் போது பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்கு என ஒதுக்கப்பட்டுள்ள 34 புள்ளிகளில், வெர்னா செடான் 28.18 புள்ளிகளை பெற்றுள்ளது. குழந்தைகளுக்கான பாதுகாப்பிற்கு என ஒதுக்கப்பட்டுள்ள 49 புள்ளிகளில் 42 புள்ளிகளை பெற்றுள்ளது. இதன் மூலம், தற்போதைய ஜென் ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சுசுகி சியாஸ் தவிர (இரண்டும் GNCAP ஆல் சோதிக்கப்படவில்லை), இந்தியாவில் உள்ள மற்ற மூன்று நடுத்தர அளவிலான செடான் கார்களும் பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


வெர்னா செடானின் பாதுகாப்பு அம்சங்கள்:


ஹூண்டாய் வெர்னாவில் ஆறு ஏர்பேக்குகள், ISOFIX குழந்தை இருக்கைகள், EBD உடன் ABS, எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், முன் பார்க்கிங் சென்சார்கள், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், டயர்-பிரஷர் கண்காணிப்பு அமைப்பு மற்றும் மேம்பட்ட டிரைவர் உதவி ஆகியவை அடங்கும். ஃபார்வர்ட் கொலிசன் வார்னிங், பிளைண்ட்-ஸ்பாட் எச்சரிக்கை, லேன் கீப் அசிஸ்ட், லேன் புறப்படும் எச்சரிக்கை மற்றும் தகவமைப்பு பயணக் கட்டுப்பாடு (ADAS) போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 


விலை விவரங்கள்:


​​வெர்னா செடான் கார் மாடல் இரண்டு பவர் டிரெய்ன்களில், EX, S, SX மற்றும் SX(O)  என நான்கு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் தொடக்க விலை ரூ. 10,96,500 ஆகவும், அதிகபட்ச விலை ரூ.17,37,900 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயனாளர்கள் ஏழு வெவ்வேறு வண்ணங்களிலும், இரண்டு டூயல்-டோன் வண்ணங்களிலும் கார்களை தேர்வு செய்யலாம்.


Car loan Information:

Calculate Car Loan EMI