Hyundai Verna: இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக திகழ்வது ஹுண்டாய். பட்ஜெட் கார்கள் முதல் சொகுசு கார்கள் வரை ஏராளமான கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஹுண்டாய் நிறுவனம். அவர்களின் முக்கியமான கார்களில் ஒன்று Hyundai Verna கார். இந்த காரின் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் குறித்து கீழே விரிவாக காணலாம்.

Continues below advertisement

Hyundai Verna:

வசீகரமான செடான் கார் இந்த Hyundai Verna கார் ஆகும். இதன் தோற்றமும், கட்டமைப்பும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கிறது. செடான் ரக கார்களில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வைத்துள்ளது இந்த Hyundai Verna கார். இந்த காரின் தொடக்க விலை ரூபாய 13.28 லட்சம் ஆகும். இந்த காரில் மொத்தம் 18 வேரியண்ட்கள் உள்ளது. இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 20.97 லட்சம் ஆகும்.

மைலேஜ்:

இந்த காரின் அனைத்து வேரியண்ட்களும் பெட்ரோலில் மட்டுமே ஓடும் கார்கள் ஆகும். 1497 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் மற்றும் 1482 சிசி திறன் கொண்ட எஞ்ஜின்களை கொண்டது இந்த கார் ஆகும். இந்த காரில் ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவல் வேரியண்ட்களும் உள்ளது. அதிகபட்சமாக 20 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 158 பிஎச்பி மற்றும் 113 பிஎச்பி திறன் கொண்ட குதிரை ஆற்றல்கள் அந்தந்த வேரியண்ட்களுக்கு ஏற்ப உள்ளது. 

Continues below advertisement

வசதிகள்:

ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு 1.24 லட்சம் ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. 6 கியர்களை கொண்டது இந்த கார். 143.8 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. நகர்ப்புறங்களில் ஓட்டுவதற்கு இலகுவான கார் இந்த கார் ஆகும். இதன் குரல் கட்டளையில் இயங்கும் சன்ரூஃப் வசதி உள்ளது.இந்த காரின் கேபின் பல்வேறு வசதிகளை கொண்டது.

தட்பவெப்பநிலைக்கு ஏற்க இந்த காரின் இருக்கைகளை குளிர்ச்சியாகவும், வெப்பமாகவும் மாற்றிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின் இருக்கையில் அமர்பவர்கள் தங்களது காலை நன்றாக நீட்டி அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 528 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. 8 ஸ்பீக்கர்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு வசதி:

வயர்லஸ் போன் சார்ஜர் வசதி உள்ளது. டிஜிட்டல் ஓட்டுநர் டிஸ்ப்ளே இந்த காரில் உள்ளது. இந்த காரில் தகவல்கள், காரின் மாடர்ன் கிராஃபிக்ஸ் தெளிவாக இருக்கும். இந்த காருக்கு ஜிஎன்சிஏபி 5 ஸ்டார் அளித்துள்ளது. 6 ஏர்பேக்குகள் வசதி இதில் உள்ளது. ஏபிஎஸ் மற்றும் இபிடி வசதி கொண்டது. ப்ளைண்ட் ஸ்பாட் டிடெக்சன் இதில் உள்ளது. ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், பார்க்கிங் சென்சார் வசதி இதில் உள்ளது. 

இதன் எல்இடி முகப்பு விளக்குகள்,  இந்த காரின் வசீகரத் தோற்றத்தை மேலும் பிரகாசமாக்குகிறது. இந்த காரின் கேபின் மாடர்னாகவும் உள்ளது.  வோஸ்க்வோகனின் விர்டஸ், ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ஸ்லேவியா ஆகிய கார்களுக்கு இந்த கார் போட்டியாக உள்ளது. இந்த காருக்கு பயனாளர்கள் 5க்கு 4.7 ஸ்டார் வழங்கியுள்ளனர்.


Car loan Information:

Calculate Car Loan EMI