இந்தியாவின் மிக பிரபலமான சப்-M4 எஸ்யூவி காரான ஹூண்டாய் வென்யூ தற்போது இரண்டாம் தலைமுறை அப்டேட்டுடன் வலம் வர உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி  வருகிறது.

ஹூண்டாய் வென்யூ:

ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபல  சப்-M4 எஸ்யூவி கார் ஆன ஹூண்டாய் வென்யூ கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் பின்னர் 2022 ஆம் ஆண்டு முகப்பு பக்கத்தில் மிகப்பெரிய மாற்றத்துடன் சந்தைக்கு விற்பனையில்  வந்தது. 

புதிய பொலிவுடன் எண்ட்ரி:

தற்போது வென்யூ காரின் உட்புறத்தில் புதிய மாற்றங்களுடன் வரவுள்ளது. இதில் முக்கியமாக காரி  ஸ்டீயரிங்கில் புதிய டிசைனுடன் மாற்றம் செய்யப்பட்டுள்ள்து போல் அந்த படத்தில் தெரிகிறது. 

என்ன மாற்றங்கள் வரவுள்ளது?

வென்யூ கார் அறிமுகமானதிலிருந்து ஸ்டீயரிங் வீலில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதனால் தற்போதைய அப்டேட்டில் ஸ்டீயரிங்கில் மாற்றம் ஏற்ப்படலாம்.  குறிப்பாக இந்த ஸ்டீயரிங் வீல் கிரேட்டா மின்சார காரில் செய்யப்பட்ட அதே தோற்றத்தில் உள்ளது, இந்த ஸ்டீயரிங் கண்ட்ரோல் சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளதால், இது இந்த காருக்கு நவீன் லுக்கை தரும். கிரேட்டவில் கியர் கன்சோல் போல் இல்லாமல் வென்யூ மாடலின் பழைய மாடலையே இந்த அப்டேட்டில் காணலாம். 

அந்த வைரல் புகைப்படங்களில் முழுமையான இன்டீரியர் காட்டப்படாத நிலையில் இருந்தாலும், Venue-வின் புதிய தலைமுறை அவதாரத்தில் பின்வரும் அம்சங்கள் இடம்பெற வாய்ப்பு அதிகம்:

  • 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே
  • 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்
  • பனோரமிக் சன்ரூஃப்
  • வென்டிலேட்டட் சீட்கள்

இந்த அம்சங்கள் இணைந்து, Venue-க்கு ஒரு மேம்பட்ட மற்றும் பிரீமியம் லுக்கை அளிக்கவுள்ளது. 

இன்ஜினில் மாற்றமில்லை:

இந்த புதிய அப்டேட் ஹூண்டாய் வென்யூவில் எஞ்சின் பிரிவுகளில் எந்த வித புதிய மாற்றங்கள் வர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

  • 1.2 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டெட் பெட்ரோல் என்ஜின்
  • 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் என்ஜின்
  • 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்

மேலும், Venue N-Line எனும் ஸ்போர்டி வெர்சனும் இத்துடன் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது. இதில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டு சிறப்பான இயக்கம் வழங்கப்படும்.

எப்போது ரீலிஸ்?

இரண்டாம் தலைமுறை புதிய ஹூண்டாய் வென்யூ வரும் பண்டிக்கை காலங்களில் சந்தைக்கு வரலாம் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. ஆனால் தற்போது வரை ஹூண்டாய் நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.


Car loan Information:

Calculate Car Loan EMI