குபேரா படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இட்லி கடை படத்தினை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தில் அருண் விஜய் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பவர் பாண்டி படத்தை போன்றே இப்படத்திலும் ராஜ் கிரன் நடித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து இந்தி படத்தில் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்க இருப்பது உறுதியானது.

Continues below advertisement

கவனம் ஈர்த்த போர் தொழில்

கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான போர் தொழில் திரைப்படம் க்ரைலம் த்ரில்லர் ஜானர் வகையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தில் அசோக் செல்வன் மற்றும் சரத்குமாரும் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். திருச்சியில் நடக்கும் ஒரு கொலை, அதன் பின் விறுவிறுப்பாய் நகரும் விசாரணை என ஒரு சைக்கோ கில்லர் படமாக வெளியாகி வெற்றியடைந்தது. இப்படம் தமிழ் சினிமாவில் அடுத்த ராட்சசன் எனவும் சினிமா விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்தனர். இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் அடுத்த படம் குறித்த அறிவுப்பு இன்று வெளியாகியுள்ளது. 

D 54 படப்பிடிப்பு

இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் ராஜா - தனுஷ் கூட்டணியில் 54 படத்திற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார். அண்மையில் படத்தின் பூஜைகள் நடைபெற்று முடிந்தது. இதன் படப்பிடிப்பு இன்று காலை தொடங்கியது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும், நடிகையாக மமிதா பைஜூ கமிட் ஆகியுள்ளார். முதல் முறையாக மமிதா பைஜூ தனுஷுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். மேலும் இப்படத்தில் ஜெயராம் மற்றும் சுராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

Continues below advertisement

3 மாதத்தில் நிறைவடையும் படப்பிடிப்பு

த்ரில்லர் ஜானர் வகை படங்களை எடுக்கும் திறன் பெற்ற இயக்குநர் என்ற பெயரை பெற்றவர் விக்னேஷ் ராஜா. இப்படம் இதுவரை தனுஷ் நடிக்காத படமாக இது இருக்கும் என்றும் போலீஸ் காப் ஸ்டோரியாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பை 3 மாதங்களில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் D 54 திரைப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே D 54 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழுவினர் தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர். 

கெத்து காட்டும் மமிதா பைஜூ

பிரேமலு படத்தின் மூலம் பிரபலம் அடைந்த மலையாள நடிகை மமிதா பைஜூ, தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கிறார். இளம் நடிகையான கயாடு லோஹருக்கும் மமிதா பைஜூவிற்கும் தான் இப்போது போட்டியே நடக்கிறது. இவர்கள் இருவரும் கமிட் ஆகும் படங்கள் அனைத்தும் முன்னணி நடிகர்களின் படமாக இருக்கிறது. மமிதா பைஜூ லைன் அப்பில் விஜய், சூர்யா, நிவின் பாலி, பிரதீப் ரங்கநாதன், தனுஷ் ஆகியோரின் படங்களில் நடித்து வருகிறார். ஒரே நாளில் சென்ஷேனல் ஹீரோயினாக மாறியிருக்கும் மமிதா இப்போ ரொம்ப பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.