அன்பார்ந்த abp நாடு வாசகர்களே மார்கழி மாதத்தில் துலாம் ராசிக்கு சூரிய பகவான் மூன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்து தைரியமான சில முடிவுகளை உங்களை எடுக்க வைப்பார்... தயங்கி தயங்கி யார் என்ன சொல்வார்கள் எது எப்படி நடக்கும் என்று அமைதி காத்தீர்கள் அல்லவா? அந்த அமைதிக்கு தற்போது. வரவிருக்கிறது.... வெற்றி ஸ்தானத்தில் சூரிய பகவான் அமர்ந்து... உங்களுக்கு தேவையான வெற்றிகளை கொண்டு வந்து சேர்ப்பார்... ஆனாலும் அதில் சில இழப்புகளை ஏற்படுத்துவார்... பத்தாம் வீட்டில் இருக்கக்கூடிய கேது பகவான் மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தையும் நல்ல எதிர்காலத்திற்கும் வழி வகுக்கும்...
வழக்காடு மன்றங்களில் துலாம் ராசிக்கு வழக்கு நிலுவையில் இருந்தால் அது விரைவாக முடித்து வைக்கப்படும்.... தீர்ப்பு உங்கள் பக்கம் கூட சாதகமாக வரலாம்.... செவ்வாய் பகவான் ஜனவரி மாதத்தில் உச்சநிலையை அடைகிறார்... அவர் உங்கள் ராசிக்கு மூன்றாம் அதிபதி நான்கில் உச்சம் வரும் பொழுது... நிலம் இடம் தொடர்பான வழக்குகள் உங்களுக்கு சாதகமாக வரும்... ஒரு இடத்தை விற்று அதன் மூலம் பொருளாதார முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று யோசிக்கும் அன்பர்களுக்கு இது ஒரு சிறப்பான காலகட்டம்... அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் குரு பகவானால் பெரிய பாதிப்புகள் உங்களுக்கு இல்லை என்றாலும் கூட பிள்ளைகள் வழியில் சில சங்கடங்களை சந்திக்க நேரம்...
அதற்கென்று கோபப்பட வேண்டாம்... நீங்கள் பொறுமை இழக்கும் அளவிற்கு சில சந்தர்ப்பங்களில் உங்களுக்கு கடுமையான கோபம் உண்டாகும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.... அஷ்டமத்தில் குரு பகவான் இருப்பது நீண்ட தூர பிரயானங்களுக்கு வழி வகுக்கும்... வெளியூர் வெளிநாடு வெளி மாநிலம் சார்ந்த காரியங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.... எட்டில் இருக்கும் குரு பகவான் இரண்டாம் இடத்தை பார்வையிடுவதால் தனஸ்தானத்தில் வலிமை ஏற்பட்டு பொருளாதார முன்னேற்றம் சற்று உயர்வாக இருக்கும்...
வியாபாரத்தில் நஷ்டத்தை சந்தித்தவர்கள் கூட லாபத்தை எதிர்பார்க்கலாம்... புதிய தொழில் தொடங்க வாய்ப்புண்டு... மார்கழி மாதத்தில் சற்று கவனமாகவும் பொறுமையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.... சூரியன் மூன்றில் இருந்து தைரியத்தை கொடுக்கும் பொழுது நிச்சயமாக வம்புக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவீர்கள்... ஆனால் அதே காலகட்டத்தில் குரு பகவான் அஷ்டமத்தில் அமர்ந்து வழக்குகளை எப்படி திருப்ப வேண்டும் என்பது போன்ற நுணுக்கங்களை உங்களுக்கு சொல்லிக் கொடுப்பார்.... இரண்டு பேர் சேர்ந்து ஒரு பிசினஸை ஆரம்பித்தால் அதில் உங்களுடைய பார்ட்னர் உங்கள் மீது தேவையில்லாத வீண் விமர்சனங்களை வைக்கக் கூடும்....
வாழ்க்கை துறையின் சில சண்டை சச்சரவுகள் வந்தாலும் கூட நீங்கள் பொறுமையாக செல்வது நல்லது... உங்களுடைய வார்த்தை பிறரை ஆறுதல் படுத்தும் வகையில் தான் அமையும்... நீங்கள் பொறுமையாக இருந்து அடுத்தவர்களை ஆறுதல் படுத்தினால் உங்களுக்கு கௌரவம் மற்றும் புகழ் வந்து சேரும்... செவ்வாய் பகவானின் மூன்றாம் இடத்து சஞ்சாரம் சிக்கலான காரியத்தை கூட எளிதாக முடிக்கும் ஆற்றலை உங்களுக்கு பெற்று தரும்.... அருகாமையில் இருக்கக்கூடிய சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானை தரிசித்து வாருங்கள் நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள் வணக்கம்....